DYFI Udumalai Rural

DYFI Udumalai Rural எல்லோருக்கும் கல்வி..
எல்லோருக்கும் வேலை...

20/08/2026

தூய சக்தி தவெக முதல்வரே இந்திய அரசியலமைப்பு சட்டம் 19 பிரிவு 1 நன்றாக படிக்கவும்

20/08/2026
19/08/2026

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க உறுப்பினர் ஆவீர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
DYFI Udumalai Rural
DYFI Tamil Nadu

பெத்லகேம் கல்லூரி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களை கைது செய்த காவல்துறைக்கு கண்டனம்DYFI மாவட்ட செயலாளர் தோழர்...
17/08/2026

பெத்லகேம் கல்லூரி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களை கைது செய்த காவல்துறைக்கு கண்டனம்

DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு உள்ளிட்ட 7 பேர் கைது – காவல்துறையின் அத்துமீறலுக்கு கடும் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள பெத்லகேம் கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராடிய மாணவிக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போராடி வரும் மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு உள்ளிட்ட தோழர்கள் பெத்லகேம் கல்லூரிக்கு சென்றுள்ளனர்.

அப்போது மாணவர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தை சூழலில், காவல்துறையினர் திடீரென தலையிட்டு போராட்டத்தில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாகவும், தோழர் விஷ்ணு உள்ளிட்டவர்களை அடித்து இழுத்துச் சென்று கைது செய்துள்ளது .

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்பது எப்படி குற்றமாகும்?
மாணவர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற வாலிபர் சங்க நிர்வாகிகளை காவல்துறையை பயன்படுத்தி கைது செய்வது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

கல்லூரி நிர்வாகத்தின் மீதான மாணவர்களின் புகார்கள் என்ன? மாணவியின் மரணத்திற்கு வழிவகுத்த சூழல் என்ன? மாணவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் உள்ளது.

கேள்வி கேட்கும் மாணவர்களை ஒடுக்குவதும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களை காவல்துறை மூலம் தாக்கி கைது செய்வதும் பிரச்சினைக்கு தீர்வாகாது.

மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் போராடும் மாணவர்களின் ஜனநாயக உரிமையை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது வலுக்கட்டாயத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு உள்ளிட்ட ஏழு தோழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை மாணவர்களுடன் இணைந்து ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தொடரும்.

மாணவிக்கு நீதி வேண்டும்!
மாணவர்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!
காவல்துறையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தோழர் விஷ்ணு உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

செல்வராஜ்
மாநில தலைவர்

எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்

17/08/2026

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி நாடு தழுவிய கையெழுத்து இயக்கம்..
உடுமலையில் இன்று 17.08.2026 திங்கட்கிழமை காலை உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்...
16/08/2026

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்,

தோழர்களே வணக்கம். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாகநாளை 17.08.2026 *திங்கட்கிழமை* *காலை 8:30* மணிக்கு உடுமல...
16/08/2026

தோழர்களே வணக்கம்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
சார்பாக

நாளை 17.08.2026 *திங்கட்கிழமை* *காலை 8:30* மணிக்கு உடுமலை *மத்திய பஸ்* *நிலையம் முன்பு*

*கையெழுத்து* *இயக்கம்* நடைபெற உள்ளது.

இந்த இயக்கத்தில் *மார்க்சிய* *பெரியாரிய* *அம்பேத்காரிய* அமைப்புகளின் நிர்வாகிகள்

மற்றும்
*வர்க்க வெகுஜன* *அமைப்புகளின்* *நிர்வாகிகள்,* *தோழர்கள்*

அனைவரும்
பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

என,
ததீஒமு
உடுமலை நகரம்,
உடுமலை ஒன்றியம்,
குடிமங்கலம் ஒன்றியம்.

15/08/2026

உடுமலை ஊராட்சி ஒன்றியத்தை
உ பி ஆக மாற்ற நினைக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டிக்கிறோம்🔴

உடுமலைப்பேட்டை கிராம சபைக் கூட்டங்களில் மத வெறியைப் புகுத்தி பாரத் மாதா கி ஜே என கோசம்போட வைக்கும் அத்து மீறிய நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இன்று 15.8.26 சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில்
125 நாட்கள் வேலை வாய்ப்பு எனது உரிமை" உறுதிமொழி நோக்கம்
VBG RAM G சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் உறுதிமொழி ஏற்கச்சொல்லி
பாரத் மாதா கி ஜே
என கோசமிடுவதற்கு அறிக்கை அனுப்பியுள்ள உடுமலை ஊராட்சி ஒன்றியத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மதசார்பற்ற அரசு அலுவலகங்களிலும் ஊராட்சி அலுவலகங்களிலும் மதம் சார்ந்த சொல்லாடல்களையும் கோசங்களையும் திட்டமிட்டு திணிக்கிற ஒன்றியஅரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக இந்த உறுதிமொழி அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.
MGNREGA- மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டம் தொடரவேண்டும்.
தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதை கைவிட்டு வேலை நாளை 200ஆகவும் சம்பளத்தை 700ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.

இந்த அறிக்கையில் பாரத் மாதா கீஜே கோசத்தை முன்வைத்து மலிவான அரசியல் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
CPIM-AIAWU-DYFI உடுமலை ஒன்றியம்.

❤️இந்திய நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்..❤️போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகா...
15/08/2026

❤️இந்திய நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்..

❤️போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க போராடுவோம்..

❤️அனைவருக்கும் 80 வது
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

15.08.2026
சனிக்கிழமை.

உடுமலைப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!​உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்...
13/08/2026

உடுமலைப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
​உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் மற்றும் அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி காரத்தொழுவைச் சேர்ந்த புரோக்கர் சிவக்குமார் என்பவர் ₹5,000 முதல் ₹7,000 வரை லஞ்சமாகப் பணம் கேட்டுப் பறிக்க முயற்சி செய்யும் அநீதியில் ஈடுபட்டு வருகிறார்.
​பணம் தர மறுப்பவர்கள் மற்றும் தன் பேச்சைக் கேட்காதவர்கள் மீது அரசு அதிகாரிகளுக்குப் பொய்யான புகார் கடிதங்களை அனுப்பி, மன உளைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும், அந்த நபர் தங்கள் மீதும் பொய்ப் புகார் அளித்து விடுவாரோ என்ற அச்சத்தில், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது.
​மேலும், தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், கணேஷ் போன்ற ஆபத்தான புகையிலைப் போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து, தனது இருசக்கர வாகனத்திலேயே சட்டவிரோதமாக உலாவவிட்டு விற்பனை செய்து வருகிறார் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன.

​மாற்றுத்திறனாளிகளிடம் லஞ்சம் கேட்டுப் பணம் பறிக்க முயலும் புரோக்கர் சிவக்குமார் மீது சட்டபூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​சிவக்குமார் சட்டவிரோதமான முறையில் பெற்றிருக்கும் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
​இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கணேஷ் போன்ற போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்துப் பகிரங்கமாக விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்தி, அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட நபர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
​நாள்: 21.08.2026 (வெள்ளிக்கிழமை)
​நேரம்: காலை 10:00 மணி
​இடம்: வட்டாட்சியர் அலுவலகம் உடுமலைப்பேட்டை
​மாற்றுத்திறனாளி நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து மேற்கண்ட நபர் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Address

முதல் தளம், ஸ்டாலின் நிலையம்
Udumalpet
641126

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Udumalai Rural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share