05/06/2026
இந்த மாதிரியான தரமான வெண்பட்டு கூடுகள் அனைத்து பட்டு விவசாயிகளாலும் அனைத்து பருவ காலங்களிலும் அறுவடை செய்வது எப்பொழுதும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. வெற்றிகரமான வெண்பட்டு கூடு அறுவடைக்கு தாரக மந்திரமான மசுதொர விமா என்னும் அரும்பெரும் தொழில் நுட்ப சூத்திரம் நமக்கு வரப்பிரசாதமாக இருந்து வருகிற பொழுதும் அதனை முறையாக முழுமையாகக் கடைப்பிடிப்பதில் பட்டு விவசாயிகள் அனுபவித்து வரும் நடைமுறை இன்னல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அதன் பிரதான முக்கியத்துவத்தை நன்றாக உள்வாங்கி உணர்ந்து ஒவ்வொரு பட்டுப்புழு வளர்ப்பின் பொழுதும் சிரமேற்கொண்டு துரிதகதியில் சற்றும் காலம் தாழ்த்தாது உடனடியாக மேற்கொண்டு சிறிதும் பாதிப்பு உண்டாகாதவாறு செயல்பட்டு பம்பர் பட்டுக் கூடுகள் அறுவடைக்கு ஒவ்வொரு பட்டு விவசாயிகளும் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சொல்லுதல் யார்க்கும் எளிதாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற வள்ளுவர் பெருமகனார் வாக்கினை நினைவில் கொண்டு பொறுமையுடன் கருணையுடன் நிலையான முயற்சி யினை வெண்பட்டு வளர்ப்புத் தொழிலில் கடைப்பிடிக்க அனைத்து பருவங்களிலும் இம்மாதிரியான தரமான வெண்பட்டு கூடுகள் பம்பர் அறுவடைக்கு சாத்தியமே … வெண்பட்டு வளர்ப்பில் மசுதொரவிம எனும் தாரக மந்திரம் என்றென்றும் மேற்கொண்டு மேன்மை அடைவோம் …✌