23/02/2026
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை மற்றும் ஸ்ரீசக்கரம் வரைந்து சிறப்பு வழிபாடு செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் 86வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்பம் நடைபெற்றது.
இந்த கோடி அர்ச்சனை நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி பங்காரு மற்றும் உலகெங்கும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தர் சக்தி பீடங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும், செவ்வாடை பக்தர்கள், தொண்டர்கள் நேரிலும், இணையத்திலும் ஒருங்கிணைந்து சிறப்பு மகா கூட்டு வழிபாடு அர்ச்சனை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் உலக நன்மைக்காக ஆதிபராசக்தி அம்மனுக்கு கோடி அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீசக்கரம் வரைந்து சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார்.
இதில் அமெரிக்கா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், துபாய், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பக்தர்களும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சார்ந்த பக்தர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு குரு போற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேலாக படித்து ஸ்ரீசக்கரம் வரைந்துஉலக சாதனை நிகழ்த்தினர்.
விழாவில், ஆன்மிக இயக்க ஒருங்கினைப்பாளர் காஞ்சனா, சக்திபீட செயலாளர் கணேஷ், துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, இளைஞர் அணி பாலசுப்ரமணி, மகளிர் அணி பொறுப்பார்கள் பரமேஸ்வரி, எட்டையபுரம் ராதிகா, தளவாய்புரம் ராஜ், புதிய துறைமுகம் கண்ணகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.