அன்றில்

அன்றில் இலக்கியம் ..உரைவீச்சு..கவிதை..

நேற்று கம்பம் நூல் ஆர்ட் அகாடமியில் நீண்ட நாட்களுக்குப் பின் அன்றிலின் மாதாந்திரக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..பெ...
05/04/2026

நேற்று கம்பம் நூல் ஆர்ட் அகாடமியில் நீண்ட நாட்களுக்குப் பின் அன்றிலின் மாதாந்திரக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

பெரும் மழை கொட்டித் தீர்ந்த பின்பும் இருபதுக்கும் மேற்பட்ட அன்றில் சொந்தங்கள் வருகை புரிந்தனர்..

மூன்று உரைகளும் மிகச் சிறப்பாக அமைந்தன..அன்றில் நிகழ்வுகளில் எப்போதும் உணரும் நேர் அதிர்வுகளை இன்றும் உணர்ந்ததாக பலரும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்..

அனைவருக்கும் நன்றியும் அன்பும்

வருகிற சனிக்கிழமை( 04.04.26) மாலை 6 மணிக்கு அன்றிலின் 51 வது மாதாந்திரக் கூட்டம்..மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வாய் அரங்...
02/04/2026

வருகிற சனிக்கிழமை( 04.04.26) மாலை 6 மணிக்கு அன்றிலின் 51 வது மாதாந்திரக் கூட்டம்..

மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வாய் அரங்கேறவிருக்கிறது..

வாய்ப்புள்ளோர் வருக!

அன்றில் இலக்கியச் சுற்றம் வருகிற நவம்பரோடு பனிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்து பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது* 5...
27/03/2026

அன்றில் இலக்கியச் சுற்றம் வருகிற நவம்பரோடு பனிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்து பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

* 5 விருது வழங்கும் விழாக்கள்

* 6 இளையோர் இலக்கிய விழாக்கள்

* பட்டிமன்றங்கள்/ வழக்காடு மன்றங்கள்/ கவியரங்குகள்

* 50 மாதாந்திரக் கூடல்கள்

என்று அன்றில் நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கிறது..

அன்றிலின் சிறகுகள் தேனி மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில்/ வெளி மாநிலங்கள் & மாவட்டங்களில் நிறைந்திருக்கின்றனர்..அவர்களுடனும் உரையாடுவதற்காக கொரோணா காலத்தில் நான்கு இணைய நிகழ்வுகளை நடத்தினோம்..பிறகு அதனைத் தொடர முடியவில்லை..பலரும் கேட்டுக் கொண்டதால் மீண்டும் இணைய நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்..

நாளை மாலை 6.30 முதல் 8 மணி வரை zoom வழியாக இணைய நிகழ்வு நடைபெறவிருக்கிறது..

இந்த மாதம் திருக்குறள் கருத்தரங்கம்

எழுத்தாளர் கோ. கமலக்கண்ணன்
'உயிர் கலந்த உயர்மறை ' என்கிற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்..
எங்கள் மாணவர் அப்சல் அகமதுவும் சிற்றுரை நிகழ்த்தவிருக்கிறார்..

வாய்ப்பு இருப்பின் வாருங்கள்,.நிகழ்வுக்கான இணைப்பு முதல் பின்னூட்டத்தில்..

Address

Theni

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்றில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அன்றில்:

Share