25/07/2026
ஏன் போராட்டம் ?
என கேள்வி கேட்பவர்களுக்கு...!
தொடர் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடக்கும் போராட்டம் ஜூன் 6 துவங்கி நாளுக்கு நாள் நாடு முழுவதும் மக்கள் எழுச்சியுடன் போராடத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறார்கள்.
முதலில் கண்டு கொள்ளாமல் சிறு கூட்டம் அரசியல் செய்கிறது என சொல்லி வெளிநாட்டு சக்தி, தேச விரோத சக்தி, அரசுக்கு எதிரான சதி என உருட்டியவர்கள் இப்போது ஒவ்வொன்றாக செய்ய துவங்கியுள்ளனர்.
இத்தனை நாளும் வாய் திறக்காத பிரதமரை, திடிரென மேக்கப்/ கேமரா மேன் இல்லாமல் நடு இரவில் சமூக ஊடகம் வழியாக போராட்டம் பேச வைத்திருக்கிறது.
அடுத்து இரண்டு கல்வித் துறை அரசு செயலாளர்கள் இட மாற்றம்.
சிறப்பு தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை விரைந்து முடிப்போம் என்கிறார்கள்.
இந்த கூட்டத் தொடரிலேயே புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
இன்று 47 தேசிய தேர்வு முகமை அதிகாரிகள்/ ஊழியர்கள் நீக்கம். காரணம் வெளி முகமை மூலம் (out sourcing) நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இவர்கள்.
தர்மேந்திர பிரதான் இராஜினாமா வுக்கு முடிவெடுக்க ஒருநாள் அவகாசம் வேண்டும்...
இத்தனை விஷயங்களும் போராட்டம் சரியாக தான் நடக்கிறது என்பதற்கு சான்று.
போராட்டம் வெல்லும்...