Isha Foundation Tamil

Isha Foundation Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Isha Foundation Tamil, Nonprofit Organization, Isha Yoga Center, Tamil Nadu, Tamil nadu.

சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா நிறுவனம், மனித நல்வாழ்வு & விழிப்புணர்வை மேம்படுத்தும் இலாப நோக்கமற்ற அமைப்பு.

🧘யோகா | தியானம் | சமூக & சுற்றுச்சூழல் முன்முயற்சிகள் சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை மனித நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் உலகளாவிய ஆன்மீக அமைப்பு. உடல் ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாற்றம் தரும் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா வழங்குக

ிறது. ஈஷா அவுட்ரீச் மூலம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நதிகளை மீட்போம், காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் போன்ற முன்முயற்சிகள் உலகளாவிய ஆதரவைப் பெற்று, முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. கிராமப்புற சுகாதார மருத்துவமனைகள், விளையாட்டுப் போட்டிகள், விவசாய முன்முயற்சிகள், அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தல் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு ஈஷா ஆதரவளிக்கிறது. யோகா மற்றும் தியானம் மூலம் உள்நிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்கள் மூலம் வெளிசூழ்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதோடு விழிப்புணர்வான மற்றும் நிலைக்கக்கூடிய உலகை நோக்கி ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

அமாவாசை & பௌர்ணமி தினங்களில், தியானலிங்கத்திற்கு பால் மற்றும் நீர் அர்ப்பணிக்கப்படுகிறது.
21/07/2026

அமாவாசை & பௌர்ணமி தினங்களில், தியானலிங்கத்திற்கு பால் மற்றும் நீர் அர்ப்பணிக்கப்படுகிறது.

20/07/2026

பட்டியார்கோவில்பதி பசங்க எல்லாரும் எங்க கிளம்பிட்டாங்க??

சமீபத்தில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்க ஈஷா உதவியுடன் கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி தோல்வியை தாண்டி குழந்தைகள் அனைவருக்கும் தங்களின் திறமைகளை சோதித்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது

கிராமோத்சவம் 2025 - ஒரு பார்வை இதோ... விளையாட்டு போட்டிகள் எப்படி நமது பாரத கிராமங்களின் உற்சாகத்திற்கு புத்துயிரூட்டுகி...
20/07/2026

கிராமோத்சவம் 2025 - ஒரு பார்வை
இதோ... விளையாட்டு போட்டிகள் எப்படி நமது பாரத கிராமங்களின் உற்சாகத்திற்கு புத்துயிரூட்டுகின்றன என்பதற்கான ஒரு நினைவூட்டல்.
இந்த வருடம் 10 மாநிலங்களில் விரிவடைந்திருக்கும் கிராமோத்சவம், இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. உங்கள் கிராமத்தின் அடையாளமாக உங்கள் குழுவை ஒன்றிணைத்து, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றிடுங்கள்.

பதிவுசெய்ய: isha.co/gramotsavam-ta

ஆதியும் அந்தமும்உள்ளும் புறமும்முன்னும் பின்னும்நீயே நிறைகிறாய்என்னில் உறைகிறாய்
20/07/2026

ஆதியும் அந்தமும்
உள்ளும் புறமும்
முன்னும் பின்னும்
நீயே நிறைகிறாய்
என்னில் உறைகிறாய்

19/07/2026

“கிருஷ்ணா லீலா” புத்தகம் அறிமுக விழாவில் உரையாற்றிய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.முரளி அவர்கள்

நம்மை எப்படி விடாமல் கர்மா துரத்தும் என்பதை அழகாக எடுத்து சொல்லி, இன்றைக்கு பெரும்பாலான மக்களுக்கு துரியோதனனின் மனமே இருக்கிறது என்பதை மஹாபாரத கதை கொண்டு விளக்குகிறார்.

18/07/2026

ராகி லட்டு செய்றது ரொம்ப ஈஸி!

மற்ற சிறு தானியங்களை விட ராகியில் 5-30 மடங்கு கால்சியம் உள்ளது. மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன. பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ராகி

17/07/2026

நாங்களே சாமியை தொட்டு பூஜை செஞ்சோம்🙏

ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆதியோகி முன்னிலையில் அமாவாசை பூஜை செய்து வழிபடுகின்றனர். சமீபத்தில் நடந்த விழாவில் இசையும் , ஆட்டமும் என பக்தி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர் . அவர்கள் ஊர் சார்பாக அங்கு வந்திருந்த எல்லோருக்கும் அன்னதானம் வழங்கினர்.

வழக்கமான அனுபவத்தைத் தாண்டி வேறு எதையோ தேடுகிறீர்களா?2027-28 சாதனபாதா நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்ற...
17/07/2026

வழக்கமான அனுபவத்தைத் தாண்டி வேறு எதையோ தேடுகிறீர்களா?

2027-28 சாதனபாதா நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

சாதனபாதா என்பது உள்நிலை மாற்றத்திற்காக, ஈஷா யோக மையத்தில் 7 மாதங்கள் தங்கி பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இப்போதே விண்ணப்பித்திடுங்கள்: sadhguru.co/spd-ta

17/07/2026

கல்வி கொடுக்கும் ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு அவர்களுடைய உடல் நலனும் உள்ளத்தின் நலனும் மேம்பட ஈஷா யோகா வகுப்பு

Address

Isha Yoga Center, Tamil Nadu
Tamil Nadu
641114

Alerts

Be the first to know and let us send you an email when Isha Foundation Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Isha Foundation Tamil:

Shortcuts

Share