Thanjai North TNTJ

Thanjai North TNTJ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thanjai North TNTJ, Nonprofit Organization, Shanthi Nagar, Nagar.

நன்றி தினமணி நாளிதழ் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு
14/04/2026

நன்றி தினமணி நாளிதழ்

தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்_தஞ்சை_வடக்கு_மாவட்டம் சார்பாக  #மாவட்ட_செயற்குழு மாலை 04.30 மணி அள...
14/04/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்_தஞ்சை_வடக்கு_மாவட்டம் சார்பாக #மாவட்ட_செயற்குழு மாலை 04.30 மணி அளவில் குடந்தை மாவட்ட மர்க்கஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் S.சாகித் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது*..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பாரூக், மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர் அலி,ஜாஃபர் அலி,அய்யூப்கான், ராஜ் முஹம்மது,அப்துர் ரஷீத்,தொண்டர் அணி செயலாளர் சலீம்,மருத்துவ அணி செயலாளர் வரிசை முஹம்மது, மாணவரணி செயலாளர் அலி முஹம்மது,வர்த்தக அணி செயலாளர் முஹம்மது யாசின், முன்னிலையில் நடைப்பெற்றது*.

இதில்
#மாநில_துணை_தலைவர்
#மவ்லவி_K_தாவூத்_கைசர் M.I.Sc அவர்கள்.

#அண்ணல்_நபியே_அழகிய_முன்மாதிரி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்..

இன் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் நஸிர் அகமது அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்..

மேற்கண்ட நிகழ்ச்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டார்கள்..

#அல்ஹம்துலில்லாஹ்..

இக் கூட்டத்தில் கீழ் கண்ட *தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன*..

பாசிச சக்திகளை புறக்கணிப்போம்

1. #தமிழக_சட்டமன்றத்_தேர்தல்_அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மைச் சமுதாயத்தை அச்சுறுத்தி, அவர்கள் மீது வெறுப்பை உமிழும் தீய சக்திகள் தமிழ்நாட்டில் வளர்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, மதவாத சக்திகள் தமிழகத்தை ஆள்வதோ அல்லது ஆட்சியதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவதோ ஒட்டுமொத்த மாநிலத்தையும் பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மத வாத சக்திகளோடு நேரடி கூட்டணி வைத்தவர்களுக்கும், மறைமுக கூட்டணி வைத்தவர்களுக்கும் மாபெரும் தோல்வியை தமிழக மக்கள் பரிசளிக்க வேண்டும் என இம்மாவட்ட செயற்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

*மாநில உரிமை பறிப்பு_தொகுதி மறுவரையறை மசோதா*

2. #வரும்_ஏப்ரல்_16_ஆம்_தேதி கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீடும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை மூலம் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டமும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது., நீண்ட நெடிய விவாதங்கள் இல்லாமல் அனைத்து மாநிலங்களின் கருத்தையும் கேட்காமல் அவசர கதியில் இந்த சட்டங்களை நிறைவேற்றுவது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை மிகக்கடுமையாக பாதிக்கும், , மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் பாசிச பாஜக அரசை இந்த இம்மாவட்ட செயற்குழு கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். தென்மாநிலங்களின் உரிமைகளை நசுக்கும் இந்த மசோதாக்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாவட்ட செயற்குழு கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
*முஸ்லிம்களின் இடஒதுக்கீடு*

3. #தமிழகத்தில்_வாழும்_இஸ்லாமியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளன , தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப்போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் என அனைத்திலும் தன்னெழுச்சியாக கலந்து கொண்டு பெரும் பங்களிப்பை செய்த சமுதாயம் மற்ற சகோதர சமுதாயங்களுக்கு இணையாக தங்களின் உரிமைகளை பெறவில்லை, அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக முந்தைய அரசுகள் சிறப்பு கவனத்தை எடுக்கவில்லை, இனி அமையவிருக்கும் அரசுகளாவது இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் , தங்களின் சமூக பொருளாதார நிலையில் உண்மையான அக்கறை காட்டும் கட்சிகளுக்கே இஸ்லாமிய சமுதாயம் பெருவாரியாக தங்கள் வாக்குகளை அளிக்கும் என இம்மாவட்ட செயற்குழு வாயிலாக உறுதியாக கூறிக்கொள்கிறோம்
*ஐந்து மாநில தேர்தல்களும் தேர்தல் ஆணையமும்*

4. #ஐந்து_மாநிலங்களில்_தேர்தல்_பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல அரசு அதிகாரிகளை மாற்றியும் பறக்கும் படை சோதனை எனும் பெயரில் மக்களை துன்புறுத்தியும் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றது மேலும் இதற்கு முந்தைய தேர்தல்களில் நடந்தது போன்று
மக்கள் தீர்ப்பை திருடும் முயற்சியில் தேர்தல் ஆணையமும் அதனுடைய முதலாளியாக செயல்படும் பாஜகவும் செயல்படுமேயானால் தமிழகம் அதிரும் ஜனநாயகப்போராட்டங்களை தேர்தல் ஆணையமும் அதன் அதிகாரிகளும் சந்திப்பார்கள் என இம்மாவட்ட செயற்குழுவாயிலாக எச்சரிக்கின்றோம்.

#தஞ்சை_FCRA_சட்டம்_அரசியலமைப்புக்கு எதிரானது

5.FCRA Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026 எனும் மசோதா பாசிச பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது., இச்சட்டத்தில் இருக்கும் சில விதிமுறைகள் சிறுபான்மையினரின் சொத்துக்களை அபகரிக்கும் உரிமையை அரசுக்கு வழங்கி உள்ளது, ஏற்கனவே வக்ப் வாரிய திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்ட பாஜக அரசு தற்போது FCRA சட்டத்தின் மூலமாக குறிப்பாக கிறித்தவ சேவை நிறுவனங்களை முடக்குவதற்கான பணிகளை செய்துள்ளது , ஒன்றிய பாஜக அரசின் சிறுபான்மை விரோத போக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, பாஜக வின் சட்ட விரோத நடவடிக்கைகளை இந்த இம்மாவட்ட செயற்குழு கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

இப்படிக்கு
S.சாகித்
மாவட்ட செயலாளர்
தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 #நோன்பு பெருநாள் தொழுகை 2026 #தொழுகை நடைபெறும் இடங்கள் #தஞ்சை வடக்கு மாவட்டம்
19/03/2026

#நோன்பு பெருநாள் தொழுகை 2026
#தொழுகை நடைபெறும் இடங்கள்
#தஞ்சை வடக்கு மாவட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....ஈரோட்டில் நடைப்பெற்ற TNTJ 25-வது மாநில பொதுக்குழுவில், தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு  மாநில த...
26/01/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஈரோட்டில் நடைப்பெற்ற TNTJ 25-வது மாநில பொதுக்குழுவில், தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு மாநில தலைமையின் மூலம் 2️⃣ பரிசுகள் வழங்கப்பட்டது....

இதற்காக உழைப்பு செலுத்திய நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக...

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாகம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் 25 வது மாநிலப் பொதுக்குழுவில் அடுத்த கட்ட செயல்திட்டத்தை மாந...
25/01/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் 25 வது மாநிலப் பொதுக்குழுவில் அடுத்த கட்ட செயல்திட்டத்தை மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம் அவர்கள் அறிவிப்பு செய்தார்.

"அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி"

2026 ஏப்ரல் முதல் 2027 ஜனவரி வரை, பத்துமாத செயல்திட்டம்.
இன்ஷா அல்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

இன்ஷா அல்லாஹ்... 04-01-2026
02/01/2026

இன்ஷா அல்லாஹ்...

04-01-2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...*மரண அறிவிப்பு*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... TNTJ கொரநாட்டுக் கருப்பூர் கிளை முன்னால் பொருளாள...
21/12/2025

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

*மரண அறிவிப்பு*

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


TNTJ கொரநாட்டுக் கருப்பூர் கிளை முன்னால் பொருளாளர் *முபாரக் அலி* அவர்கள் நேற்று மாலை சவுத் ஆப்ரிக்காவில் மரணித்து விட்டார்கள்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அந்த சகோதருக்காக துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

இப்படிக்கு
S. சாகித்,
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தஞ்சை வடக்கு மாவட்டம், *சுவாமிமலை கிளை சார்பாக**💫தொழுகைக்குப் பிறகு ப...
05/12/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம்,
*சுவாமிமலை கிளை சார்பாக*

*💫தொழுகைக்குப் பிறகு பத்து நிமிட பயான் நடைபெற்றது*

🗒️நாள்:*(05/12/25) வெள்ளிக்கிழமை*

⏰நேரம்: *மக்ரிப் தொழுகைக்கு பிறகு*

🔊உரை:*ஜக்கிரியா*(மாவட்ட பேச்சாளர்)

🛑தலைப்பு:*யார் முஃமினான வெற்றியாளர்கள்❓*

*அல்ஹம்துலில்லாஹ்*

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
*சுவாமிமலை கிளை,*
தஞ்சை வடக்கு மாவட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தஞ்சை வடக்கு மாவட்டம், சுவாமிமலை கிளை சார்பாக, *💫🌾ஒரு கைப்பிடி அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டத...
05/12/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம்,
சுவாமிமலை கிளை சார்பாக,

*💫🌾ஒரு கைப்பிடி அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டது*

🗓️ நாள்:*(05/12/25) வெள்ளிக்கிழமை*

🕒நேரம்: *இஷா தொழுகைக்கு பிறகு விநியோகம் செய்யப்பட்டது*

🔵நபர்கள்: *09 நபர்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டது*

*♦️மொத்தம் 45 கிலோ அரிசி விநியோகம் செய்யப்பட்டது*

*இதற்காக வாரி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக*

*அல்ஹம்துலில்லாஹ்*

*இச்செயல் திட்டத்தின் மூலமாக மக்கள் பயன்பெற்றனர்*

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
*சுவாமிமலை கிளை,*
தஞ்சை வடக்கு மாவட்டம்.

05/12/2025
05/12/2025
*பசித்தோர் புசித்திட சொர்க்கத்தை பெற்றிட உணவு விநியோகம் அல்ஹம்துலில்லாஹ்...*
05/12/2025

*பசித்தோர் புசித்திட சொர்க்கத்தை பெற்றிட உணவு விநியோகம் அல்ஹம்துலில்லாஹ்...*

Address

Shanthi Nagar
Nagar
612001

Telephone

+918754707666

Alerts

Be the first to know and let us send you an email when Thanjai North TNTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thanjai North TNTJ:

Share