Relaxing Alligator

Relaxing Alligator Just fun but it's not fun

'பேஸ்புக்'-இல் பதிவிட்டு எவ்வளவு காசு💰 பார்க்கலாம்? என்று கேட்டால்; ஒவ்வொரு மாதமும் - ஆயிரங்களில், லட்சங்களில் உழைக்கலாம...
23/10/2025

'பேஸ்புக்'-இல் பதிவிட்டு எவ்வளவு காசு💰 பார்க்கலாம்? என்று கேட்டால்; ஒவ்வொரு மாதமும் - ஆயிரங்களில், லட்சங்களில் உழைக்கலாம். சிலவேளை அதற்கும் மேலாக பார்ப்பவர்களும் இருக்கலாம்.

'பேஸ்புக்'-இல் பதிவிடுகின்றவர்களுக்கு அந்த நிறுவனம் காசு💸 கொடுக்கிறது.

எல்லோருக்கும் இந்த வாய்ப்பு இருக்கிறதா என்றால், இல்லை. 'நீங்கள் காசு உழைக்கும் தகுதியைப் பெற்றிருக்கிறீர்கள்' என்று 'பேஸ்புக்'-கே உங்களுக்குத் தெரிவிக்கும். அவ்வாறானவர்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளது.

'பேஸ்புக்'-இல் காசு உழைப்பதற்கும், அதற்கான தகுதியைப் பெறுவதற்கும் - நாம் இடுகின்ற பதிவுகள்தான் அடிப்படையாக இருக்கின்றன.

எனவே, பதிவுகள் அனைத்தும் நமது சொந்தச் சரக்காக இருக்க வேண்டும். படங்களை (Photos)📷 கொண்ட பதிவுகளுக்கே, அதிகம் காசு கிடைக்கிறது. எனவே, நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு படமொன்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பதிவுகளை அதிகம் பேர் பார்க்க வேண்டுமென்றால், அவை எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை யோசியுங்கள்.

மனிதன்👨‍🦱 அடிப்படையில் விடுப்புப் பார்ப்பதிலும் கதை கேட்பதிலும் ஆர்வம் உள்ளவன். எனவே, வாசகர்கள் அறிந்திராத/அறிய விரும்பும் விடயங்களை, ஒரு கதை போல எழுதுங்கள்.

திரைக்கும் பின்னால் நடப்பவற்றைத் தெரிந்து கொள்வதற்கு, மனித மனம் எப்போதும் விரும்பும். எனவே, அவ்வாறான நிகழ்வுகளை பதிவிடுங்கள்.

பொதுவாக, தாம் இழந்தவற்றின் மீது எல்லோருக்கும் ஓர் ஏக்கம் இருக்கும். எனவே, அவை குறித்து எழுதுங்கள்.

மறுபுறம், மனிதர்கள் உணர்வுபூர்வமானவர்கள்💓 - கருணைமிக்கவர்கள். எனவே, 'நெஞ்சைத் தொடும்' கதைகளை வாசகருக்குக் கொடுங்கள்.

தைரியமிருந்தால், அவ்வப்போது ஊறுகாய் போல, சர்ச்சைக்குரிய விடயங்களையும் உங்கள் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், உங்கள் பதிவில் தேவையான இடங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் emoji🥰களை இட்டுக் கொள்ளுங்கள்.

பதிவின் முடிவில், பொருத்தமான மற்றும் Trendingஆன ஹேஷ்டேக் (Hashtag) வார்த்தைகளைப் போடுங்கள்

இவை அனைத்தும் 'பேஸ்புக்' சொல்லும் ஒழுக்க விதிகளுக்குள் அமைய வேண்டும்.

காசு வருகிறது என்பதற்காக, சிலர் எந்த 'மட்டத்துக்கும்' இறங்கி பதிவுகளை இடுகின்றனர். நமக்கான தரத்தை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு விவசாய பூமி போல, டிஜிட்டல் நிலமொன்றை நமக்கு 'பேஸ்புக்' கொடுத்திருக்கிறது.

எதை விதைப்பது? எப்படி விதைப்பது? என்பதைப் பொறுத்தே, நமக்கான அறுவடை கிடைக்கும்.

ஜெய்பீமில் செங்கேணி் case பெருசா போனதும்., DGP office வர சொல்லி மன்னிச்சிடுமா.,நீ எவ்ளோ கேட்டாலும் compensation வாங்கி த...
20/10/2025

ஜெய்பீமில் செங்கேணி் case பெருசா போனதும்., DGP office வர சொல்லி மன்னிச்சிடுமா.,நீ எவ்ளோ கேட்டாலும் compensation வாங்கி தரேன்.. போன உசுரு வராது.,பசங்க futureக்கு use ஆகும்னு கேப்பாங்க..

அந்த பணத்த வேணாம்னு சொல்லிட்டு திரும்பி போறப்ப “என் பசங்க வளர்ந்ததும் ஏதும்மா இவ்ளோ காசுன்னு கேட்பாங்க. அப்ப இது உங்கப்பனை அடிச்சே கொன்னவங்க கொடுத்த காசுன்னு சொல்லவா சார்? "னு கேட்டு போகும் அந்த பொண்ணு.!

ஆனா இங்க செத்தது சந்தோசம் தான்னு ஒரு கும்பல்.!?

முன்பெல்லாம் எந்த ஊர் போனாலும் ஒரு 800 ரூபாய் இருந்தால் போதும் ரூமில் தங்கிக் கொள்ளலாம் ஆனால் இப்போது குறைந்தபட்சமாக 110...
25/09/2025

முன்பெல்லாம் எந்த ஊர் போனாலும் ஒரு 800 ரூபாய் இருந்தால் போதும் ரூமில் தங்கிக் கொள்ளலாம் ஆனால் இப்போது குறைந்தபட்சமாக 1100 லிருந்து தான் ஆரம்பிக்கிறது ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள அனைத்து ம் மக்களுக்கு சற்று சிரமமாக உள்ளது.
ஏன் இந்த விலை மாற்றம்.
பொதுவாக உள்ளூர் நிகழ்ச்சி நடந்தாலோ அல்லது முகூர்த்த நாட்களில் தான் இந்த அதிகபட்ச விலை போடுவார்கள். சராசரி நாட்களில் இந்த விலை மாற்றம் என்ன காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்

photo from

18/09/2025

Address

Kallakurichi
606213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Relaxing Alligator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share