தென்தமிழகம் - ThenThamilagam

தென்தமிழகம் - ThenThamilagam கீரியாறு சீறிப் பாயட்டும்! தென் தமிழகம் துலங்கட்டும்!!

06/08/2026

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

Audio Track:
https://drive.google.com/file/d/1pnjewFvmBa4bF-wzLlgp5TB6CA2UiRxR/view?usp=drivesdk

இது தொன்மையான தமிழ் வழக்கு. இது அமெரிக்கா - ஈரான் போரில் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் நவீன தொழில்நுட்பங்களில் அதிநவீன ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள், நீர்மூழ்கித் தாக்குதல் படகுகள் மற்றும் நிலத்தடி அணுசக்தி வசதிகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது பழைய கதை.

அடுத்து Saturation Attack என்பது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குறைந்த விலை Shahed ட்ரோன்களையும் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஒட்டுமொத்தமாக ஏவுவது.
முதலில் வரும் மலிவான ட்ரோன்களை அழிக்க பேட்ரியாட் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு தீர்ந்துவிடுகின்றன. அந்த இடைவெளியில் முக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்குகின்றன. இதுவும்கூட பழைய கதைதான்.

அடுத்து, ஈரானின் நவீன ஏவுகணைகள் வான்வெளியில் பயணிக்கும்போது, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் பல போலிகளை (Decoys) ரிலீஸ் செய்கின்றன. THAAD ரேடார்களால் உண்மையான ஏவுகணை எது, போலி எது என்று கண்டறிந்து தடுப்பதற்குள் நிஜ ஏவுகணைகள் இலக்கை அடைந்துவிடுகின்றன.

சூப்பர்சோனிக் வேகம் மற்றும் சூழ்ச்சித் திறன், அதாவது Terminal Maneuvering திறன் கொண்ட ஏவுகணைகள் இன்று முக்கியமான அச்சுறுத்தல்கள் ஆகும். வழக்கமான ஏவுகணைகள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். அதை தாட் அமைப்புகள் எளிதாகக் கணித்து அழித்துவிடும். ஈரானின் புதிய ஏவுகணைகள் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தவுடன் தங்களின் திசையையும் வேகத்தையும் நொடிக்கு நொடி மாற்றும் திறன் கொண்டவை. இதனால் பேட்ரியாட் அமைப்புகளால் அவற்றைக் குறிவைக்க முடிவதில்லை.

சமீபத்திய மோதல்களில், ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் நிறுத்தப்பட்டிருந்த இந்த பாதுகாப்பு வளையங்களை மீறி ஈரானிய ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளன. அமெரிக்காவின் ஒரு பேட்ரியாட் தடுப்பு ஏவுகணையின் விலை சுமார் $4 மில்லியன் டாலர் ஆகும். ஈரான் தொடர்ந்து ஏவும் ஏவுகணைகளை அழிக்க அமெரிக்காவிடம் போதிய அளவில் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் இருப்பு இல்லை என்று அமெரிக்கா கவலை!

ஈரானின் 'ஃபத்தாஹ்' ஏவுகணைகள் (Fattah 1 & Fattah 2) ஒலியை விட 13 முதல் 15 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு வளையங்களை உடைக்கும் திறன் கொண்டவை. ஈரானில் இருந்து இஸ்ரேல் அல்லது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஏழே நிமிடங்களுக்குள் இந்த ஏவுகணைகளால் அடைய முடியும்.

இதனால் எதிரி நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் திட்டமிட சில நொடிகள் மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்காவின் அதிநவீன THAAD மற்றும் Patriot போன்ற ரேடார் அமைப்புகளால் தங்களின் பாதையைத் தொடர்ந்து மாற்றும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் குறிவைப்பது கடினம்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.



Lux Cozi T Shirts
https://amzn.to/4f6mqvg

05/08/2026

60 வருடங்களாகத் தொடரும் ஆபாச அரசியல்...

Audio Track:
https://drive.google.com/file/d/1wMl2_J3hbEIzQimArQG2_lcxPWOtkNSd/view?usp=drivesdk

Transcript:
திராவிட அரசியலில் ஆபாசமாகப் பேசும் பேச்சாளர்கள் பரம்பரை தமிழகத்தில் உருவானது. பக்தவத்சலத்தின் முகம், காமராஜரின் நிறம் ஆகியவற்றைப்பற்றி 1967 தேர்தல் சமயத்தில் கட்சித்தலைவர்கள் ஏளனமாக விமர்சித்ததில் ஆரம்பமானது இந்த கலாச்சாரம். அதுகூடப் பரவாயில்லை, "காமராஜர் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டிருக்கிறார்" என்றது அவலத்தின் உச்சம்.

சட்டமன்றத்திலேயே நாடா, பாவாடை என்று இரட்டை அர்த்தத்துடன் பேச்சுக்கள் அரங்கேறின. அதைப் பெருமையாக நினைத்து கட்சியினர் முன்னுதாரணமாக வரித்துக்கொண்டனர். பின்னர் நாலாம்கட்ட ஐந்தாம்கட்டத் தலைவர்கள் அவர்கள் போட்ட கோட்டில் ரோட்டையே போட்டுவிட்டார்கள்!

அறிவு கெட்டவர், மூளைஇல்லாவர் என்ற சாதாரண (?) வார்த்தைகளில் ஆரம்பிக்கும் அர்ச்சனைகள் ஒழுக்கமற்றவர், ஓடுகாலி என்பதுவரை போனதுகூட பெரிதில்லை, அரசியலில் நேரடியாக சம்பந்தப்படாத குடும்பப் பெண்களையும் அதில் இழுத்துப் பேசுவது கேவலமான செயல். இப்போது அது பிரச்சினையில்லை.

ஏனென்றால், அதுதான் நமது பாரம்பரியம், கலாச்சாரம். இப்போது பிரச்சினை என்னவென்றால், அப்படிப் பேசுபவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதுதான். பிறகு? எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? கட்சித் தலைவர்களே, "மேடையில் பேசிய பேச்சுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கலாமா?" என்று கேட்கிறார்கள்!

பின்னே, அப்படிப் பேசுவது பேச்சாளர்களின் உரிமை அல்லவா? அதற்கு லாவணி பாடவேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை அல்லவா? அதுதானே தமிழகத்தில் வழிவழியாக வந்த பண்பாடு? இதைவிட, பாரதப்பிரதமரைப் பற்றி முட்டுச்சந்தில் போடப்படும் பொதுக்கூட்டங்களில் ஏழாம்தர எட்டாம்தர பேச்சாளர்கள் பேசாத பேச்சா? ஆனால், அதைப்பற்றிக் கேட்க இங்கே நாதியில்லை. அவ்வளவுதான்.

நாம், யார்யார் பேசினார்கள், என்ன பேசினார்கள், அவர்கள் பேசியதற்கு உண்மையான அர்த்தம் என்ன, அவர்கள் அப்படிப் பேசியது சரியா தவறா ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கு விடை சொல்ல வரவில்லை. யாராக இருந்தாலும் பொதுக்கூட்டங்களில் மரியாதைக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

பொதுமேடைகளில் வாய்க்கு வந்தபடி இஷ்டத்துக்கு பேசும் கலாச்சாரம் ஒழியவேண்டும். இதற்கு பொதுமக்கள், கட்சிகள், காவல்துறை, நீதிமன்றங்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டுமே தவிர "எப்படி வேண்டுமானாலும் பேசலாம்" என்ற கலாச்சாரத்தை ஆதரிப்பது தவறு.

#திராவிடகலாச்சாரம் #திராவிடமாடவ் #காமராஜர் #தமிழகஅரசியல்

DENVER Perfume For Men
https://link.amazon/B0b7LQFYO

05/08/2026

பைக் டாக்ஸி: சந்துபொந்துகளில் சீறிப்பாயும் ‘டைம் மெஷின்’!

Audio Track:
https://drive.google.com/file/d/1a7I2GSCZenIJUsfPFeqnY_UHU4Y5jldZ/view?usp=drivesdk

டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு, ஆபீசுக்கு நேரமாகிவிட்டதே என்று நகத்தைக் கடித்துக்கொண்டிருக்கும்போது... பின்னாடி ஒரு ஹார்ன் சத்தம் கேட்கும் பாருங்கள், அதுதான் நம்ம ஊர் பைக் டாக்ஸி!

இன்றைக்கு ஐடி ஊழியர்கள் முதல் சாமானியர்கள் வரை பலருக்கும் இதுதான் ஆபத்பாந்தவன். கார் மற்றும் ஆட்டோக்கள் நுழைய முடியாத குட்டி சந்துபொந்துகளிலும், டிராஃபிக் நெரிசல்களிலும் புகுந்து, நம்மை நினைத்த நேரத்திற்குக் கொண்டு சேர்க்கும் நிஜ ‘டைம் மெஷின்’ இந்த பைக் டாக்ஸிகள் தான்.

ஆனால், இது ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. 1981-லேயே கோவா மாநிலத்தில் ‘பைலட்’ என்ற பெயரில் சட்டப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது!

இன்றைக்கு ராபிடோ (60% மார்க்கெட் ஷேர்), ஓலா, உபெர் என கார்ப்பரேட் வடிவம் எடுத்து பைக் டாக்ஸி உலகையே கலக்கிக்கொண்டிருக்கிறது. ரேபிடோ கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு இந்திய நிறுவனமாகும்.

நேரத்தை மிச்சப்படுத்துவது, குறைந்த கட்டணம், வேலைவாய்ப்பு என இதில் பல ப்ளஸ்கள் இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் மாநிலங்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் இதற்கு சவால்கள்ஆகும்.

ஹெல்மெட் போடுங்க, பத்திரமா பயணிங்க! நீங்க கடைசியா எப்ப பைக் டாக்ஸில போனீங்க? உங்க சுவாரசியமான அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க!



Lux Cozi Men's Cotton Boxers
https://link.amazon/B0gea9UUa

05/08/2026

"என்னமோ... இடது பக்கமே இழுக்குது!" - நம்ம மூளை செய்யும் 'உல்டா' வேலை!

Audio Track:
https://drive.google.com/file/d/1ng2lPZYf3agbEL7wkxmIDVq2Gn1tvLDW/view?usp=drivesdk

நீங்க எப்போவாவது கவனிச்சிருக்கீங்களா ப்ரோ? ஒரு பெரிய கிரவுண்ட், பூங்கா, இல்லன்னா ஷாப்பிங் மாலுக்குள்ள சும்மா சுத்தி வரும்போது, நாம அறியாமலேயே எப்பிடியும் 'இடது பக்கமா' (Anticlockwise) தான் திரும்புவோம் அல்லது நடப்போம்.

"அட ஆமாப்பா... நாம ஏன் எப்பவும் கடிகார முள்ளுக்கு எதிரா லெஃப்ட் சைடே சுத்துறோம்?" ன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா?

இத ஏதோ எதேச்சையா நடக்குற விஷயம்னு விட்றாதீங்க. இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சயின்ஸ் இருக்கு! விஞ்ஞானிங்க இதுக்கு 'ஆண்டிக்ளாக்வைஸ் பயாஸ்' (Anticlockwise Bias) ன்னு பந்தாவா ஒரு பேர் வச்சிருக்காங்க. அதாவது, மனிதர்களுக்கு பிறப்பிலேயே இடது பக்கமா சுத்துற புத்தி இருக்காம்!

சமீபத்துல ஸ்பெயின், ஜப்பான் மாதிரி உலக நாடுகள்ல இதப்பத்தி ரிசர்ச் பண்ணி சில ஷாக்கிங் உண்மைகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க:

கொரோனா கொடுத்த ஐடியா: கொரோனா காலத்துல சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணி மக்கள் எப்படி நடக்குறாங்கன்னு நோட்டம் விட்டப்ப தான் விஞ்ஞானிகளுக்கு இந்த டவுட்டே வந்திருக்கு. அப்புறம் லேப்ல வச்சு டெஸ்ட் பண்ணி இத கன்பார்ம் பண்ணிட்டாங்க.

இளைஞர்களின் லெஃப்ட் இசம்: வயசானவங்களை விட, சின்ன பசங்களும் எங்ஸ்டர்ஸும் தான் பயங்கரமா இந்த இடது பக்க சுழற்சியை ஃபாலோ பண்றாங்களாம். (நமக்கு தான் எப்பவுமே நேர் வழியில போக புடிக்காதே!)

லெஃப்ட் ஹேண்டா.. ரைட் ஹேண்டா?: நீங்க ரைட் ஹேண்ட் பழக்கம் உள்ளவரா, லெஃப்ட் ஹேண்டா, இல்ல வடிவேலு மாதிரி ரெண்டு கையிலயும் எழுதுறவராங்கிறது முக்கியமே இல்ல. உங்க கை, கால், கண் எது ஸ்ட்ராங்கா இருந்தாலும், மூளை உங்களை லெஃப்ட் சைடு தான் திருப்பும்.

காரணம் என்ன தெரியுமா?: பூமி சுத்துறதுனாலயா, இல்ல கண்ணு பாக்குற பார்வை கோளாறாmன்னு எல்லாத்தையும் செக் பண்ணிட்டு அதெல்லாம் இல்லன்னு சொல்லிட்டாங்க. நாம ரெண்டு கால்ல நடக்கும்போது, நம்ம உடம்போட வெயிட் பேலன்ஸ் நம்மள அறியாமலே லெஃப்ட்ல சாய்க்குதுன்னு ஒரு குத்துமதிப்பா சொல்றாங்க.

ஆனா, மூளையில இருக்குற எந்த நரம்பு இத பண்ணுதுங்கிற ஒரிஜினல் ரகசியத்தை இன்னமும் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்க முடியல. 'விடை தெரியாத வினா'-வா அது பாட்டுக்கு சுத்திட்டிருக்கு!
அடுத்த தடவை உங்க லவ்வரோட பார்க்குக்குப் போகும்போது கவனிச்சு பாருங்க... நீங்க ரெண்டு பேரும் லெஃப்ட்ல தான் சுத்துறீங்களான்னு! ஒருவேளை ரைட்ல சுத்துனா... உங்க மூளையில ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம்!



Jockey Cotton Solid Brief
https://link.amazon/B01teftUz

04/08/2026

பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 2026: நிர்வாகத்தில் புதிய மாற்றம்!

Audio Track:
https://drive.google.com/file/d/1yGV4640fyabmVDBVq_50vz8Rg6cgH6Xx/view?usp=drivesdk

Transcript:
நாடாளுமன்றம் 2026-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதாவைச் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம், ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்வதற்கு நீதிமன்றங்களுக்கே செல்லவேண்டும். இனி மாநில அரசு நிர்வாக நடுவருக்குப் (Executive Magistrate) பதிலாக, உயர் நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் முதன்மை நீதித்துறை நடுவர் (Judicial Magistrate of First Class) விசாரணை செய்து ஒப்புதல் அளிப்பார்.

1969-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டமே இந்தியாவில் ஆதார், கடவுச்சீட்டு (Passport), வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பள்ளிச் சேர்க்கை போன்ற அனைத்து முக்கிய அடையாளச் சான்றிதழ்களுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது.

இப்புதிய சட்டத் திருத்தம், தாமதமான பதிவுகளில் முறைகேடுகளைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையையும் போலி ஆவணங்கள் உருவாக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும்.

#பிறப்புஇறப்புபதிவு2026
#சட்டதிருத்தம்
#நீதித்துறைநடுவர்
#முக்கியஅடையாளச்சான்று





Lux Cozi Men Cotton Vest
https://link.amazon/B04sGoHk5

04/08/2026

பாகிஸ்தான்: சிதறும் தேசம்

Audio Track;
https://drive.google.com/file/d/15mrQ6A4_snspzfNkgWbh5npeAxUok1lr/view?usp=drivesdk

பாகிஸ்தான் இன்று கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம் மற்றும் உள்நாட்டுப் பிரிவினைவாதப் போராட்டங்களால் சிதறும் விளிம்பில் தவிக்கிறது. வங்காளதேசப் பிரிவினைக்குப் பிறகும், அந்நாடு பல்லின மக்கள் வாழும் பகுதிகளில் சமத்துவத்தை நிலைநாட்டத் தவறியதே இந்த வரலாற்றுச் சரிவுக்கு முதன்மைக் காரணமாகும்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான், தங்கம், தாமிரம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் நிறைந்தது. இங்குள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் பஞ்சாப் மாகாணத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுவதாக பலுசிஸ்தான் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) போன்ற கிளர்ச்சிக் குழுக்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தொடர் மற்றும் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டங்களையும், குவாடர் துறைமுகத்தையும் தங்களின் நில அபகரிப்பாகக் கருதி கிளர்ச்சியாளர்கள் குறிவைக்கின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வாழும் மக்கள், தங்களுக்கு அடிப்படை அரசியல் உரிமைகளும், பிராந்திய சுயாட்சியும் மறுக்கப்படுவதாகப் போராடி வருகின்றனர்.

கோதுமை மானியம், குறைந்த மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்மின் நிலைய ராயல்டி போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக அவாமி ஆக்‌ஷன் கமிட்டி (JAAC) போன்ற அமைப்புகள் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

தேர்தல்களில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் தராமல், பாகிஸ்தான் அரசு நடத்தும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் வீதிக்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவமும், மத்திய அரசும் அனைத்து அதிகாரங்களையும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க வர்க்கத்திடம் மட்டுமே வைத்துள்ளன. பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்வா போன்ற பகுதிகளில் உள்ள பல்வேறு இனக் குழுக்களின் போராட்டங்கள் இப்போது ஒன்றுக்கொன்று ஆதரவாக ஒருங்கிணைந்து வருகின்றன.

சுன்னி-ஷியா பிரிவினரிடையேயான மோதல்களும், தீவிரவாத அமைப்புகளின் எழுச்சியும் நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.

தற்போது பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் எல்லைகளுக்கு வெளியில் இருந்து வரவில்லை; மாறாக அதன் சொந்த எல்லைகளுக்குள் இருந்தே வெடித்துள்ளன. அடக்குமுறையாலும், ராணுவ பலத்தாலும் மட்டுமே ஒட்டுமொத்த தேசத்தையும் தற்காலிகமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாகிஸ்தான் ராணுவம், மக்களின் உரிமைக் குரல்களை ஒடுக்கத் தவறினால், தேசம் பல துண்டுகளாக உடைவதைத் தடுத்து நிறுத்த முடியாது.





#பாகிஸ்தான்
#பலுசிஸ்தான்
#காஷ்மீர்
#உலகநடப்பு

Lux Cozi Cotton Solid Vest
https://link.amazon/B03jslPMr

03/08/2026

ஊழலை எதிர்த்து அரசியல் எழுச்சி!

Audio Track:
https://drive.google.com/file/d/1Y8u_nGRZAQFgl8FQ079F8IFr6IH3WKlL/view?usp=drivesdk

"ஊழலை ஒருபோதும் சகிக்கமாட்டேன். தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்" என முதல்வர் ஜோசப் விஜய் எச்சரிக்கை. 2026 தேர்தலை "ஊழலுக்கு எதிரான பேரெழுச்சி" எனலாம். அதை கவர்ச்சி அரசியல் என்று மடைமாற்றம் செய்தற்கு கழகங்கள் முனைகின்றன. அப்படிப் பார்த்தாலும் ஊழல் அரசியலைவிட கவர்ச்சி அரசியல் மேலானதே. ஊழல் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்கிறது. ஊழலில்லாமல் ஆட்சி செய்தால் முதலில் இலவசங்கள் தேவையில்லை!

சமுதாயத்தில் ஊழல் மலிந்துவிட்டதற்கு 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளே காரணம் என்று மக்கள் உணர்ந்ததால், 2026 தேர்தலில் இலவசங்கள் மற்றும் தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உதவித்தொகையாக ரூபாய் 8000 போன்ற தேர்தல் வாக்குறுதிகளை சற்றும் சட்டை செய்யாமல் மக்கள் இரண்டு கழகங்களையும் ஒதுக்கிவிட்டு விஜய்க்கு வாக்களித்து அரியணையில் ஏற்றினர்.

அதே சமயம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய அரசு அமைப்புகள் மூலம் தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் "அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ஊழல் வலையிலிருந்து திமுக மீண்டு வருவதே சாத்தியம் இல்லை என்று இதைவைத்து புரிந்துகொள்ளலாம். ஊழலின் வேர் எதுவரை செல்லும், யாரையெல்லாம் சீண்டும் என்று யாருக்குத் தெரியும்?

அண்ணாமலை, ஊழலுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர். "தமிழ்நாட்டின் மிக முக்கியப் பிரச்சனை ஊழல்தான்" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களோடு (எ.கா: 'டி.எம்.கே ஃபைல்ஸ்') தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

யாராக இருந்தாலும் ஆதாரங்கள் இருந்தால் பதவியில் இருந்து தானாக விலகவேண்டும். சட்டம் தன் கடமையை செய்யட்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாம் நிரபராதிகள் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வக்கலாத்து வாங்கி அரசியல் தலைவர்கள் பேசுவது நமது அரசியலமைப்பையும் நீதித்துறையையும் கேலி செய்வதற்கு ஒப்பானது.

ஊழல்களினால் ஏழைகளுக்கு அநீதி நிகழ்கிறது, மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள், நாட்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஒரு சிலரின் தீராப்பசிக்கு சமுதாயமே இரையாகிறது. இத்தகைய காரணங்களால் ஜனநாயகம் பலவீனமடைகிறது. 2026 தேர்தல், ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி, அவர்களால் மக்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கமுடியாது என்பதையும் நிரூபித்துள்ளது.

ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மேலிருந்து கீழ்மட்டம் வரை கூட்டணி போட்டு ஊழல் செய்வதில் திமுக-அதிமுக கட்சிகளிடமும் நல்ல புரிதல் இருந்தது. எதிர்ப்பதற்கு ஆளில்லை என்று ஊழல் வெளிப்படையாகவே நடந்தது. ஆனால், இனி எதிர்வரும் காலத்தில் விஜய்க்கு மாற்றாக ஊழல் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவது துர்லபம். அண்ணாமலையின் வரவு தமிழக அரசியலை மேலும் தூய்மைப்படுத்தும் எனலாம்.

Tamilnadu has a chance!

#அண்ணாமலை #விஜய் #தவெக #திமுக #அதிமுக

Samsung Galaxy M36 5G
https://link.amazon/B0fIIgc3Y

P.S.
If you haven't subscribed to our channel yet, please do so now! Our team works hard to bring you insightful content that drives awareness. Your support keeps us going — this is your channel!

03/08/2026

சமூகம் போற்றும் ‘டிஜிட்டல்’ ஆபத்துக்கள்!

Audio Track:
https://drive.google.com/file/d/1h28NVnwN5qOy4-EFfM_9HKJWBmNGMlCn/view?usp=drivesdk

காலை விடிந்ததும் இறைவனைத் தொழுத காலம் போய், ஸ்மார்ட்போன் திரையைத் தொடும் யுகத்திற்கு வந்துவிட்டோம். நம் வீட்டின் வரவேற்பறை வரை தன் விஷக் கரங்களை நீட்டியுள்ளது சமூக வலைத்தளம்! இன்று அங்கிங்கெனாதபடி சமூக வலைத்தளம் எங்கும் போலி 'இன்ஃப்ளூயன்சர்கள்' (Influencers) ஆதிக்கம் தான்.

போலி சுய விளம்பர மருத்துவர்கள், ஒரே வாரத்தில் நோயைக் குணமாக்கும் "அற்புதக் மருந்துகள்" மற்றும் ஆன்மீக/தெய்வீகத் தீர்வுகள் என மக்களை ஏமாற்றுகிறார்கள். மறுபுறம் சரியான வழிகாட்டுதல் இல்லாத உடற்பயிற்சி, யோகா முறைகள் மற்றும் ஆபத்தான ஆரோக்கிய சப்ளிமெண்ட்கள் (Health Supplements)!

ஒரே நாளில் பணக்காரராகும் ஜோதிட பரிகாரங்கள், உடனடிக் கடன் (Online Loans), கிரெடிட் கார்டு என ஆசைகாட்டி வாழ்க்கையைச் சூறையாடும் ஆன்லைன் நிதி மோசடிகள்! இவை போலீசுக்குப் போனாலும் தீராத பிரச்சினைகள்! மேலும் ஓயாத அரசியல் அலப்பறைகளுக்கும் பஞ்சமில்லை.

மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமை, சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடற்ற எல்லைகள், முழுமையான தணிக்கை (Censorship) செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சட்ட ரீதியான உடனடித் தீர்வுகள் கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணம்.

சட்டங்களும் தணிக்கைகளும் ஒரு எல்லை வரைதான் உதவும். நமது விழிப்புணர்வே மிகச்சிறந்த அரண்! திரையில் தோன்றும் எல்லாமே உண்மையல்ல. எதையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து ஏமாறுவதை தவிர்க்கவேண்டும்! இதை இன்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

#இன்ஃப்ளூயன்சர்கள் #விழிப்புணர்வு #டிஜிட்டல்ஆபத்துக்கள் #சமூகவலைத்தளங்கள்

TCL 108 cm (43 inches)
https://link.amazon/B01tmr9Bd

02/08/2026

உண்மையை ஏற்கும் வரை நிம்மதி இல்லை: நம் மனதின் மாயாஜால 'மறுப்பு' வளையம்!

இது மனிதர்கள் மட்டுமல்லாமல், நிறுவனங்கள் மற்றும் அரசியல்கட்சிகளும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்!

அதிர்ச்சியான ஒரு செய்தியைக் கேட்கும்போதோ அல்லது எதிர்பாராத இழப்பைச் சந்திக்கும்போதோ, நம்மில் பலரது மனம் முதலில் சொல்வது "இல்லை, இது நடந்திருக்க வாய்ப்பில்லை" என்பதைத்தான். இந்த ஒரு வரி, ஏதோ தற்காலிக அறியாமை அல்ல; அது நம் மனதின் மிக முக்கியமான பாதுகாப்பு அரண். உளவியலில் இதனை 'மறுப்பு' (Denial) என்கிறார்கள்.

நம் மனம் தாங்க முடியாத துயரத்தையோ, திடீர் மாற்றத்தையோ எதிர்கொள்ளும் போது, ஒரு தற்காப்பு கவசமாக இந்த மறுப்பு நிலை செயல்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை நிலைநிறுத்தவும், வலியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணிக்கவும் உதவும் ஒரு தற்காலிக 'பிரேக்' (Brake) போன்றது. மரணம் அல்லது பெரும் ஆபத்துகளைப் பற்றிய பயத்தை தற்காலிகமாகக் குறைத்து, அன்றாட வாழ்க்கையைத் தொடர இது உதவுகிறது.

ஆனால், இந்த மறுப்பு நிலை நீடித்தால் என்னாகும்? அதுவே நமக்கான ஒரு முட்டுக்கட்டையாக மாறிவிடும்.

மறுப்பு எப்படி வெளிப்படுகிறது?

மறுப்பு என்பது எப்போதும் "இல்லை" என்று நேரடியாகச் சொல்வது மட்டுமல்ல. அது பல வடிவங்களில் நம்மை ஏமாற்றும்:

சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல்: ஒரு பெரிய பிரச்சினையை ஒப்புக்கொண்டு, ஆனால் "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை, சரியாயிடும்" என அதன் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவது.

காரணங்கள் தேடுதல்: உண்மையை எதிர்கொள்ள அஞ்சி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் சாக்குகளையும் நியாயங்களையும் கற்பிப்பது.

தவிர்த்தல்: மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் உரையாடல்கள், மனிதர்கள் அல்லது சிந்தனைகளில் இருந்து முற்றிலும் விலகி ஓடுவது.

எல்லையைத் தாண்டும்போது என்ன நடக்கிறது?

குறுகிய காலத்திற்குப் பாதுகாப்பளிக்கும் இதே மறுப்பு, நீண்ட நாட்களுக்கு நீடித்தால் பெரும் ஆபத்து. இது முறையான மருத்துவச் சிகிச்சையையோ அல்லது எடுக்க வேண்டிய அவசர முடிவுகளையோ தள்ளிப்போட வைக்கும். இதனால் உறவுகளுக்குள் விரிசல் விழுவதுடன், மனநலமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

உண்மை என்னவென்றால்: வலியைத் தவிர்ப்பதற்காக நாம் கட்டும் இந்த மறுப்புச் சுவர், ஒரு கட்டத்தில் நம்மையே சிறைப்பிடித்துவிடும்.

இதிலிருந்து மீள்வது எப்படி?

மறுப்பில் இருந்து வெளிவருவது ஒரே நாளில் நடக்கும் அதிசயமல்ல; அது ஒரு மெதுவான பயணம். சுய விழிப்புணர்வு (Self-awareness) தான் இதற்கு முதல் படி. நம்முடைய எண்ணங்களை நாமே நடுநிலையான ஒரு மூன்றாவது மனிதராக நின்று கவனிக்கப் பழக வேண்டும்.

"நாம் எதற்காவது சாக்குப்போக்கு சொல்கிறோமா? அல்லது உண்மையை எதிர்கொள்ள பயப்படுகிறோமா?" என்று நம்மையே சுயபரிசோதனை செய்துகொள்வது இந்த மாய வளையத்திலிருந்து நம்மை விடுவித்து, உண்மையான குணமடைதலை நோக்கி அழைத்துச் செல்லும்.

உண்மையை ஏற்றுக்கொள்வதே, மன அமைதிக்கான முதல் திறவுகோல்! உண்மையை ஏற்றுக்கொள்ளும்போதே "நாட்டுல நடக்காததா? அதையும் பாத்துறலாம்!" என்ற தைரியம் தானாகவே வருகிறது.

#மறுப்பு #உளவியல் #மறுப்புநிலை #மறுப்புவளையம்

TCL 108 cm (43 inches)
https://link.amazon/B01tmr9Bd

P.S.
If you haven't subscribed to our channel yet, please do so now! Our team works hard to bring you insightful content that drives awareness. Your support keeps us going — this is your channel!

02/08/2026

உன்னைச்சொல்லிக் குற்றமில்லை, என்னைச்சொல்லிக் குற்றமில்லை...

Audio Track:
https://drive.google.com/file/d/10OgLgyn7BR05mA8ha2t0A1nA3CxnNzON/view?usp=drivesdk

துரியோதனின் பலவீனம் தொடையில் இருந்ததால் போரில் அவனை தொடையில் அடித்து சாய்த்ததாக மகாபாரதத்தில் வரும். அதுபோல தமிழகத்தில் திராவிடக்கட்சிகள், விஜய்யின் பலவீனம் அவருடைய திரைத்துறை பின்புலம் என்று வைத்துக்கொண்டு, அவருக்கு அரசியல் தெரியவில்லை, நடப்பது கவர்ச்சி அரசியல் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.

விஜய் பேச்சை குறைத்து செயலில் காட்டுகிறார். புரையோடிப்போன ஊழல் கலாச்சாரத்திற்கெதிராக போராடுகிறார். 2026 தேர்தலுக்கு முன் மக்கள் ஊழலை ஒழிக்கமுடியும் என நம்பியதில்லை. ஊழல்தான் சமூக அநீதியின் அஸ்திவாரம்; அதை ஒழிப்பதில் விஜய் குறிப்பிடத்தக்க வெற்றியினை அடைவார் என நம்புகிறார்கள்.

பேசிப்பேசியே வளர்ந்த கட்சிதான் திமுக. ஆனால் வெற்றுப்பேச்சு இனிமேல் வேலைக்கு ஆகாது. காலம் மாறிவிட்டது. கடைசியில் உன்னைச்சொல்லிக் குற்றமில்லை, என்னைச்சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என கண்ணதாசன் பாடிய மாதிரி ஆகிவிட்டது.

மாற்றம் என்பதை நிகழ்த்துவது மக்களே. ஆனால் மாற்றத்தை செயல்பாட்டில் கொண்டுவருவது ஒரு சுயநலமற்ற தலைவவனால் மட்டுமே முடியும். அப்படித்தான் விஜய்யை மக்கள் நம்புகிறார்கள். அதை ஒப்புக்கொண்டு கண்ணியத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திராவிடக் கட்சிகளுக்கு இல்லை.

இன்று திராவிடக் கட்சிகள் விஜய்யின் மீது வயிற்றெரிச்சலில் புழுதியை வாரித் தூற்றுவதைத் தவிர நேர்மையாக வேறு எதையும் செய்வதற்கில்லை. திராவிடக் கட்சிகள் இரண்டும் ஊழல்வாதிகளால் பின்னப்பட்ட வலைகள் ஆகிவிட்டன. அவர்களை வெளியேற்றி கட்சியின் அமைப்பைத் திருத்த வேண்டுமானால் கட்சியைத்தான் கலைக்கவேண்டும் என்ற நிலை!

சினிமாவில் நடித்து வந்த விஜய் இன்று நேரம் தவறாமல் அவலகத்திற்கு வந்து மக்கள் பணி செய்கிறார். சினிமாவில் சோபிக்கமுடியாத வேறு சிலர் அரசியலுக்கு வந்து நடிக்கிறார்கள். விஜய்யின் வெற்றியை கவர்ச்சி அரசியல் என்கிறார்கள். சினிமாவை வைத்து வளர்ந்த கட்சி, உலகில் வேறு எங்கும் நடிகர்கள் நாட்டின் தலைவர்களாக ஆனதே இல்லை என்பதுபோல பேசுவது அபத்தம்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் நடிகராக இருந்து அரசியல்வாதி ஆனவர்தான். காமெடி நடிகராக இருந்து உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான வொலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று உலக வல்லரசான ரஷ்யாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறார். இவ்விருவரைப் பற்றி ஏத்தனையோ விமர்சனங்கள் உண்டு; அதில், நடிகர்கள் என்ற லிமர்சனம் இல்லை! அதெல்லாம் இங்குதான்.

நடிகர் அரசியலுக்கு வந்தது இருக்கட்டும். பேரரசர் ஹர்ஷர் நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார் என்பது வரவாறு! எனவே முதல்வர் நடித்த படத்தை அவரது கேபினட் மந்திரிகள் பார்த்ததை ஏளனம் செய்வதை என்ன சொல்வது? திமுக ஆட்சியில் இருந்தபோது, இல்லாத ஒரு திராவிடத்தைப் பற்றிப் பேசிக்கொண்டும், திராவிட மாடல் என்று கூவிக்கொண்டும் இருந்தது. ஆட்சியை இழந்தபின் தனிமனித துவேஷத்தில் இறங்கிவிட்டது!

"காலம் மாறும்போது... அரசியலும் மாற வேண்டும்!"

#விஜய் #தவெக #திமுக #அதிமுக

Lux Cozi Cotton Solid Vest
https://link.amazon/B03jslPMr

Address

Chromepet
Chennai
600044

Telephone

+19789494609

Website

Alerts

Be the first to know and let us send you an email when தென்தமிழகம் - ThenThamilagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share