09/04/2025
Sai Vignesh
💯 அருமை, இந்த மீன், எருமை, அரிசி, பருப்பு, கோதுமை, கரும்பு, கீரை, காய்கறி, பழங்கள், இலை, தழை, செடி, கொடி, மரம் இவற்றுக்கு எல்லாம் உயிர் இல்லையா bro...??? Guess 🤔
உணவுச் சங்கிலியில் ஒரு உயிரினம், இன்னோர் உயிரினத்தை சார்ந்தே வாழும்...!!!
அப்படித்தான் இந்த உலகம், உயிரினங்கள் அனைத்தும் வாழ்கின்றன...!!!
உணவு அரசியல்...
யாருக்கு எது விருப்பமோ, அதை சாப்பிடுவார்கள்...
அடுத்தவர் தட்டை எட்டி பார்ப்பது தவறு...
எமது உணவு... அது
எமது உரிமை...!!!!
பூண்டு வெங்காயம் அசைவம் சாப்பிடுபவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் பூர்வக்குடிகள் தேசிய இனங்கள், திராவிட பாரம்பரிய பின்னணி கொண்டவர்கள்...!!!
பூண்டு வெங்காயம் அசைவம் சாப்பிடாதவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல பூர்வக்குடிகள் அல்ல... ஆரிய பாரம்பரிய பின்னணி கொண்ட நாடோடிகள், வந்தேறிகள்....!!!
ஆடு, மாடு, கோழிகளை எல்லாம் நேர்ச்சை செய்து, பலியிட்டு படையல் போடுபவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்...!!!
காது குத்து முதல் திருமணம், என நல்லது கெட்டது அனைத்துக்கும் ஆடு, மாடு, கோழிகளை விருந்து வைக்கும் பழக்கம், பண்பாடு கொண்டவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்...!!!!
வடநாட்டில் இன்றும் பல சாதியினர் எருமை, ஆடு , மாடுகளை பலியிடுகிறார்கள்... சாப்பிடுகிறார்கள்...
நாகலாந்து, கோவா, கேரளா, பெங்கால், அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், மேகாலயா, நேபால், பூட்டான், அருணாச்சல பிரதேசம் போன்ற பிரதேசங்களில் மக்கள் இன்றும் அசைவம் சாப்பிடுகிறார்கள்...
பீஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஜல புஷ்பம் என கூறி மீன்களை சாப்பிடும் பார்ப்பனர்கள் இன்றும் உண்டு...
அஸ்வமேத யாகம், (குதிரையை பலியிட்டு யாகம்) செய்ததாக ஆரிய வேதத்தில் உள்ளது..
பசு மாடுகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டதாக ஆரிய வேதத்தில் உள்ளது..
ராமன் காட்டில் மான் போன்ற மிருகங்களை வேட்டையாடி அசைவ உணவு உண்டதாக ஆரிய வேதத்தில் உள்ளது... ரங்கராஜ் பாண்டேவுடன் நேர்காணலில் ஒரு பார்ப்பன சாமியார் கூறிய வீடியோ ஆதாரம் இன்றும் வைரலாகி வருகிறது...
உண்மைகள் எல்லாம் இப்படி இருக்க...
அசைவம் சாப்பிடக் கூடாது, மாடு சாப்பிடக்கூடாது...
ஆடு , கோழி பலியிடக் கூடாது என்று சொல்வது... எல்லாமே.. தனிநபர் உரிமைகளில், மத வழிபாட்டு உரிமைகளில் நேரடி / மறைமுக அத்துமீறல்..
நமக்கு சாப்பிட விருப்பம் இல்லை என்றால் நாம் சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளவேண்டும்...
அடுத்தவர்களை சாப்பிடக் கூடாது என்று சொல்வது அத்து மீறல்.. உரிமை மீறல், உணவு உரிமை மீறல்...
(1) உயிர் மீது அன்பு வைப்பது சரிதான்.
மாமிசம் உண்ணாமல் இருப்பது அது ஒவ்வொருடைய தனிப்பட்ட செயல், தனிப்பட்ட உணவு உரிமை, தனிப்பட்ட நம்பிக்கைகள் சார்ந்தது.
(2) உணவுக்காக மாமிசம் , மீன், முட்டை, அரிசி, பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது தவறல்ல...
(3) இயற்கையாக நமது, விரல்கள், நகங்கள், பற்கள் தொடங்கி செரிமான அமைப்புகள், உறுப்புகள், உடல் அமைப்பு மாமிசம் மற்றும் காய்கறி பழங்கள் சாப்பிடும் தன்மையில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது.
(4) மற்ற கூரான பற்கள் கொண்ட மிருகங்கள் அசைவம் மட்டும் சாப்பிடும் உடல் அமைப்பும், மற்ற தட்டையான பற்களை கொண்ட மிருகங்கள் சைவம் மட்டும் உண்ணும் பட்சினியாகவும் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளது.
(5) மனிதன் மட்டும் தான் சைவம், அசைவம் என இரண்டு வகைகளையும் உட்கொள்ளும் சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்டு உள்ளான்..
(6) உணவுக்காக மாமிசம் சாப்பிடுவது குறைவு..
வர்த்தக ரீதியாக மாமிசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் அதிகம்.
இதில் இந்தியா முதலிடம்.
இவர் உண்மையிலேயே மாமிசங்களை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக தான் விழிப்புணர்வு செய்யவேண்டும்..
(7) மாடு, எருமை மாமிசம், பால், ஆட்டு பால், கோழி, கோழி முட்டை, மீன் இவைகளை உணவாக உட்கொள்வது தவறு கிடையாது..
(8) எல்லோரும் காய்கறிகள் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடியவே முடியாது, யதார்த்தத்தில் சாத்தியம் இல்லை.
(6) ஏனென்றால் எல்லோரும் காய்கறி சைவம் சாப்பிட மாறினால்.. காய்கறி விலைகள் மாமிசம் விலையை போல விண்ணை முட்டி விடும்..
(9) உலகில் பல மனிதர்கள் பல தட்ப வெட்ப சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள். சிலர் அசைவம் சாப்பிடும் சூழல் தான் உண்டு.. சிலர் சைவம் சாப்பிடும் சூழல் உண்டு...
(10) அரிசி பருப்பு காய்கறிகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்...
இவர் பல வீடியோக்களில் தன்னையே அறியாமல், யதார்த்தத்தை புரியாமல் மிகைப்படுத்தி பேசி வருகிறார்.
இன்னும் 10 வயது பாலகன் போலவே தவறான செய்திகளை பதிந்து வருகிறார்.
உணவு தேர்வு என்பது ஒவ்வொருவரின் விருப்பம், உரிமை..
உணவுச் சங்கிலி தொடர் என்பது அறிவியல்..
ஒன்றை நீக்கினால் இன்னொன்று உயிர் வாழாது, அழியும்..
இறுதியில் மனித சமூகமும் அழிவை நோக்கி செல்லும்..
ஏனென்றால் இந்த உலகில் உள்ளவை ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்..
அப்படித்தான் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளது..
#சிந்தியுங்கள்.
Magesh M ... மற்ற உயிரினங்கள் மீது அன்பு காட்டுவது தான் சரி..
அறிவியல் கூறும் இயற்கை உணவு சங்கிலித் தொடர் என்றால் என்ன..???
நாம் மாமிச பட்சினி, சைவம், அசைவம் இரண்டும் செரிக்கக் கூடிய உடலமைப்பு படைக்கப்பட்டு உள்ளோம்....
(11) பிற உயிரிடம் அன்பு செலுத்துவது தான் அடிப்படை மனிதம்.. அதை தான் இஸ்லாம் போதிக்கிறது.
இன்னும் ஒரு படி மேலே போய்,...
ஒரு மனிதரை கொன்றவர், ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொன்றவர் போலாவார்...
ஒரு மனிதரை வாழ வைத்தவர், ஒட்டு மொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் போலாவார் என்கிறது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே..
(12) உணவுக்காக அன்றி மற்ற ஆடு, மாடு, கோழி, ஒட்டகம் போன்ற பிராணிகளை கொல்வது "பாவம்" என்று சொன்னது இஸ்லாம் மார்க்கம். இன்னும் செடி, கொடி, மரம் இவற்றை அழிப்பது பாவம் என்கிறது இஸ்லாம்.
(13) பூமியின் உள்ள படைப்பினங்களுக்கு கருணை காட்டாதவன் மேல்... வானத்தில் இருப்பவன் (படைத்தவன்) கருணை காட்டுவதில்லை என கூறுகிறார் நபி (சல்) அவர்கள்.
(14) தாகமாக இருந்த நாய்க்கு தண்ணீர் ஊற்றியதால் ஒரு விபச்சாரியின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டது என நபி (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு பூனையை இறை தேடவிடாமல் அடைத்து வைத்து, பட்டினி போட்டு கொன்றதால் நரகம் சென்றாள் ஒருவள்... என கூறியுள்ளார்கள் நபி (சல்) அவர்கள்...
(15) மாட்டை கொன்று ஏற்றுமதி செய்யலாம்.. ஆனால் மாட்டை உணவாக உட்கொள்ள கூடாது என்றால் என்ன நீதி...???
மாடு தான் புனிதம், ஆனால் பார்ப்பனர் அல்லாத சாதிகள் எல்லாம் அசுத்தம், தீட்டு, தீண்டாமை என்கிறது ஆறியம் மனுநீதி வர்ணாசிரம சட்டம்.
மாடு குளிக்கும் ஆறு, குளத்தில் சக மனிதன் குளிக்கத் தடை..!!!
மாட்டை விட நம்மை போன்ற சக மனிதன் தாழ்வானவனா..???
சிந்தியுங்கள்..
இதெல்லாம் சங்கிக்களுக்கு புரியுமா...???
இஸ்லாம், முஸ்லிம்கள் மீது உள்ள தவறான புரிதல்களுக்கும், அவதூறுகள், பொய்கள், குற்றச்சாட்டுக்களுக்கும்... சரியான விளக்கம் கொடுப்போம்...
கடவுள் கோட்பாடுகள், மத நம்பிக்கைகள், வட்டார/கலாச்சார, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பற்றி நாகரீகமான உரையாடல்...
வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.. பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்..
நாகரிகமான விவாதங்களுக்கும்,
சந்தேகம், விளக்கங்களுக்கும்...
இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து கொள்ளவும்.
இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்