தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கம்

தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கம் Promoting Legal Awareness, Consumer Rights, Public Interest and Social Justice across Tamil Nadu.

29/07/2026

என் சக வழக்கறிஞரின் விழிப்புணர்வு பதிவு

வழக்குரைஞரான என்னிடமே #பஜாஜ்_பைனான்ஸ் நிறுவனம் செய்த முறைகேடு...

#ரூபாய்_60000/- அபராதம் விதித்த தஞ்சாவூர் நுகர்வோர் ஆணையம்...

#பொதுமக்கள்_விழிப்புணர்வு அடைய வேண்டிய #வழக்கின்_வெற்றிக்கதை...!

நான் கடந்த 07.12.2024 அன்று அலைபேசி ஒன்று வாங்குவதற்காக தஞ்சாவூர் சாம்சங் ஷோரூமில் ரூ.17,000 மதிப்பிலான செல்போன் வாங்கி பணம் செலுத்த முற்பட்ட பொழுது, அங்கிருந்த பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) ஊழியர், "சார் 0% வட்டி தான், EMI இல் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.

"என்னிடம் பணம் இருக்கிறது, மேலும் கடன் வாங்கி EMI கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை, எனவே வேண்டாம்" என்றேன்.

"சார் எங்களுக்கு இவ்வளவு லோன் கொடுக்க வேண்டும் என்ற டார்கெட் இருக்கு, பிளீஸ் சார்... உங்களுக்கும் சிபில் ஸ்கோர் உயரும், EMI ஏதாவது சரியாக செலுத்தினால் தான் சிபில் ஸ்கோர் உயரும், இல்லையேல் அப்படியேதான் இருக்கும்" என்றார்.

உடன் வந்திருந்த நண்பர், "சார் அடுத்து வீட்டு லோன் வாங்கனும்னு சொன்னீங்களே, அதுக்கு உதவியா இருக்கும், நீங்க என்ன ஒழுங்கா EMI காட்டாமலா இருக்க போறீங்க, வாங்குங்க சார்" என்றார்.

இவ்வளவு வற்புறுத்தலின் பேரில் CIBIL Score உயரும் என்ற நல்லெண்ணத்தில் ரூ.13,222 தொகையை 0% வட்டி கடனாகப் பெற்றேன்.
மாதம் ரூ.1,888 வீதம், 02.01.2025 முதல் 02.07.2025 வரை ஏழு தவணைகள்...

அனைத்துத் தவணைகளுக்கும் எனது இந்தியன் வங்கி (Indian Bank) கணக்கில் போதிய பணத்தை முறையாகப் பராமரித்து வந்தேன்.

ஒவ்வொரு மாதமும் சரியாக 2- ஆம் நாள் ECS முறையில் EMI பணத்தை எடுத்துக் கொள்ளும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், கடைசி EMI தொகையான ஜூலை 2-ஆம் தேதி என் கணக்கில் பணம் இருந்தும், பஜாஜ் நிறுவனம் அதனை எடுக்காமல் விட்டுவிட்டு, 11.07.2025 அன்று என்னை தொலைபேசியில் அழைத்து, காசோலை பணமின்றி திருப்பப்பட்டதாக கூறி வழக்கமான மிரட்டும் தொனியில் பேசினார்கள். நான் யாரென்று எதுவும் சொல்லாமல் பேசினேன்.

எனது வங்கி கணக்கு அறிக்கையை (Bank Statement) அனுப்பி, என் தரப்பில் தவறு இல்லை என்பதை நிரூபித்தும், அதை ஏற்க மறுத்து தாமதக் கட்டணம் மற்றும் காசோலைத் திருப்பப்பட்டதற்கான கட்டணம், தாமதக்கட்டணம் என ரூ.530-ஐக் கூடுதலாக மொத்தம் ரூ.2,418 கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். பலமுறை போன், Msg....

"சரி, உங்களுக்கு நேரம் சரியில்லடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு அடுத்த நாள் 12.07.2025 சனிக்கிழமை ரூபாய். 2418/- யை ஆன்லைனில் செலுத்தி விட்டேன்.

பணத்தைச் செலுத்திய மறுநாளும்/ ஞாயிறு அன்றும் மீண்டும் பணம் கட்டச் சொல்லி என்னை தொந்தரவு செய்தனர் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர்.
அப்பொழுது தான் கேட்டேன், "நான் யாரென்ற தகவல் உங்களிடம் உள்ளதா?" என்று...
"இல்லை, லோன் நம்பர், போன் நம்பர் தான் வரும்" என்றார்கள்.

"சரி, நான் நேற்றே பணத்தை செலுத்தி விட்டேன், பிறகெதற்கு இன்று அழைக்கின்றீர்கள்? அதும் ஞாயிறு கடன் வசூல்...?" என்றேன்.

"எங்களுக்கு இன்னும் Update ஆகவில்லை" என்றார் அந்த ஊழியர்.

அப்போது சொன்னேன்,
"நான் ஒரு வழக்குரைஞர், பிறருக்கு வழக்குகளை நடத்துபவன், என்னிடமே இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்கின்றீர்கள் என்றால், சட்டமறியாத பொது மக்களிடம் என்னவெல்லாம் செய்வீர்கள்?" என்றேன்.

"எங்க மேனேஜரிடம் சொல்லி, செக் பவுன்ஸ் பணத்தை திரும்ப கொடுக்கிறோம் சார்" என்று பதறினார் அந்த ஊழியர்...

"வேண்டாம், உங்களை, உங்கள் நிறுவனத்தை எங்கு நிறுத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும், இந்த ரூபாய். 530 கூடுதலாக வாங்கியதற்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்க வைக்கிறேன் பாருங்கள்" என்று அந்த அழைப்பை துண்டித்தேன்.

அதுமட்டுமின்றி, இந்த கடன் பெறும் பொழுது எனது CIBIL Score-ஐ 744-லிருந்து 733 ஆகக் குறைத்து விட்டது. மேற்படி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கை என் நற்பெயருக்கு மிகப்பெரிய களங்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

"ஒரு வழக்கறிஞரான எனக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களை இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வளவு பாடுபடுத்தும்?"

தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் CC NO:165/2025 வழக்கு தொடர்ந்தேன்.

நேற்று முன்தினம் 21.07.2026 எனது வாதங்களை ஏற்றுக்கொண்டு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சேவைக் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறையைக் கண்டித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் பின்வருமாறு தீர்ப்பளித்தது:

1) வங்கி கணக்கில் உரிய தொகை இருந்த பொழுதே, காசோலை திரும்பப் பட்டதாக கூறி புகார்தாரரிடம் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.530/- தொகையை, வசூலித்த தேதியிலிருந்து திரும்பச் செலுத்தும் நாள் வரை 12% வட்டியுடன். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

2) சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையால் புகார்தாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000/- வழங்க வேண்டும்.

வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10,000/- வழங்க வேண்டும்.
இத்தொகையை 6 வார காலத்திற்குள் வழங்கத் தவறினால், கூடுதல் அபராத வட்டியாக ஒட்டு மொத்த தொகைக்கும் சேர்த்து 12% வட்டி செலுத்த வேண்டும்.

இதன் மூலம் பொது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான்...
பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்டவிரோதாமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை என்ன ரூ.530 தானே என்று கடந்து செல்லாதீர்கள்...

ஏதும் சண்டையிடாமல் பணத்தை செலுத்தி விட்டு அதன் அடிப்படையில் வழக்கு தொடருங்கள்,வெற்றி பெறுவதுடன் அந்நிறுவனங்களுக்கு பெரும் படிப்பினையை ஏற்படுத்துங்கள்...

இவ்வாறு சட்டவிரோதமாக வசூலிக்கும் சிறு தொகை, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கணக்கிடும்போது பல நூறு கோடி ரூபாய் அந்த நிறுவனங்களுக்கு அநியாய லாபமாக மாறுகிறது.

நான் நுகர்வோர் ஆணையத்திடம் இறுதியாக வைத்த வாதம் இதுதான்,

"இந்த நிறுவனம் குறைந்தது இந்தியா முழுவதும் 5,00,00,000/- (5 கோடி) பேருக்கு கடன் கொடுத்ததாக வைத்துக் கொண்டால் கூட இதுபோன்று சட்டவிரோத வசூல் மூலம் அவர்கள் இப்படியாக பெறும் உத்தேச வருமானம் ரூ. 530× 5,00,00,000 = 26,50,00,00,000/- இலாபம். (265 கோடி)"

ஏன் இந்த நிறுவனங்கள் கொழுத்து திரிகின்றன என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.

நன்றி....!!!
சு. செல்வநாயகம் M.Sc., LL.B.,
வழக்குரைஞர், தஞ்சாவூர்.

20/07/2026

*இந்த ஐயரை எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துக் கொண்டு வாங்கப்பா😂*

16/07/2026

தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்.. "எங்களால் முடியல.." உச்ச நீதிமன்றத்தில் ஒரு நொடி பரபரப்பு
ஹைதராபாத்: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வழக்கு 15 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

வழக்கு இத்தனை காலம் நிலுவையில் இருப்பதால் தனது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் சொல்லிய அந்த பெண், வழக்கை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று தாலியை கழற்றி முறையிட்ட சம்பவம் பேசுபொருளானது..

நமது நாட்டில் நீண்ட காலமாக வழக்குகள் நிலுவையில் இருப்பது பெரிய பிரச்சனையாகவே உள்ளது. தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதி தான் என்பது இங்கு கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது. இதுபோல வழக்குகள் தாமதம் ஆவதால் பலரும் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இந்தச் சூழலில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முறையிட்ட பெண்

நேற்றைய தினம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு வழக்குகளை விசாரித்து கொண்டு இருந்தது. அப்போது வழக்கறிஞர் இல்லாமல் நேரடியாக ஆஜரான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், "நான் ஹைதராபாத்தில் இருந்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் வாழ்க்கையே வாழ முடியாமல் தவிக்கிறோம். எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கு குறித்து முறையிட்டார்.

அப்போது அதை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு அடுத்த திங்கட்கிழமை சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் வந்து காசு செலவழிக்க வேண்டாம் எனச் சொன்ன தலைமை நீதிபதி, ஆன்லைன் மூலமாக ஆஜராகலாம் என்றும் தெரிவித்தார். மேலும், விசாரணையில் அவர் தரப்பு வாதத்தை கேட்க தேவையான அளவு நேரம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தாலியை கழற்றி வேதனை

தொடர்ந்து அந்த பெண் தனது குடும்பத்தின் நிலையை தலைமை நீதிபதியிடம் விளக்கினார். அவர், "நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். குழந்தைகளுக்கு உணவு கூட வழங்க முடியவில்லை. அவர்களின் கல்விச் செலவையும் ஏற்க முடியாத நிலை உள்ளது" என்று கண்ணீருடன் கூறினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை அகற்றிய அந்த பெண், "எங்களிடம் இதை தவிர வேறு எதுவுமே இல்லை.. அந்தளவுக்கு கஷ்டத்தில் இருக்கிறோம்" குடும்பம் சந்திக்கும் துயரத்தை பற்றி கண்ணீர்விட்டார். அவர் திடீரென தனது தாலியை அகற்றியதால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

உறுதியளித்த தலைமை நீதிபதி

அப்போதும் கோபப்படாத தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் வழக்குப் பட்டியலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன் பிறகே அந்த பெண் சற்றே ஆறுதல் அடைந்தார். இது தொடர்பான வீடியோ, போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் 15 ஆண்டுகளாக நடக்கும் அந்த வழக்கு என்ன.. அதன் பின்னணி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

புதிய திட்டம்

சமீபத்தில் தான் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பழைய வழக்குகளை விரைந்து விசாரிக்கும் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் நான்கு சிறப்பு அமர்வுகளை அமைத்திருந்தார். சுமார் 800 பழைய வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து முடிப்பதே இதன் நோக்கமாகும்.

15 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருப்பதாக கூறிய ஹைதராபாத் பெண்ணின் உணர்ச்சிபூர்வ கோரிக்கை, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

10/07/2026

🚨 முக்கிய செய்தி 🚨
⚖️ தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
📜 நீதிமன்றத்தின் கருத்து:
"ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்குகள் முடிவடையும் வரை புதிதாக இடைத்தேர்தல் நடத்தக் கூடாது."
இதனையடுத்து, இடைத்தேர்தல் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.

The Tamil Nadu government places restrictions on authorities over transferring officers and staff involved in   2027, as...
09/07/2026

The Tamil Nadu government places restrictions on authorities over transferring officers and staff involved in 2027, as the Phase 1 is set to commence on July 17.

08/07/2026
🚨 நத்தம் பட்டாவில் தவறு இருந்தால் யாரை அணுக வேண்டும்? – நில நிர்வாக ஆணையருக்கு திருத்த அதிகாரம் வழங்கிய தமிழக அரசு!📜 அரச...
08/07/2026

🚨 நத்தம் பட்டாவில் தவறு இருந்தால் யாரை அணுக வேண்டும்? – நில நிர்வாக ஆணையருக்கு திருத்த அதிகாரம் வழங்கிய தமிழக அரசு!

📜 அரசாணை விவரங்கள்

* அரசாணை (நிலை) எண்: 396
* துறை: வருவாய் நி.அ.2(1) துறை
* தேதி: 18.09.2003
* பொருள்: நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாக்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்தும் அதிகாரம் தொடர்பாக புதிய நடைமுறை.

பின்னணி

தமிழகத்தில் பல ஆண்டுகளாக நத்தம் நிலவரித்திட்டம் (Natham Settlement Scheme) மூலம் கிராம நத்தம் நிலங்களில் வசித்து வந்த மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தபோது:

* தவறான சர்வே எண்கள்,
* தவறான எல்லைகள்,
* தவறான உரிமையாளர் பெயர்கள்,
* பட்டா வழங்கும் போது ஏற்பட்ட நிர்வாகப் பிழைகள்

போன்ற பல குறைகள் பின்னர் கண்டறியப்பட்டன.

இந்த பிழைகளை எந்த அதிகாரி திருத்த வேண்டும் என்ற விவகாரத்தில் மாவட்டங்களுக்கு இடையே ஒரே மாதிரியான நடைமுறை இல்லாததால், அரசு இந்த முக்கிய அரசாணையை வெளியிட்டது.

அரசாணைக்கு முன் நிலை

1988, 1996 மற்றும் 1997-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பல அரசாணைகள் மூலம் நத்தம் நிலவரித்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், இறுதி ஆணைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தும் அதிகாரம் குறித்து தெளிவான நடைமுறை இல்லை.

இதனால்:

* பொதுமக்கள் பல்வேறு அலுவலகங்களுக்கு அலைந்தனர்.
* ஒரே மாதிரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
* பல மனுக்கள் நீண்டகாலம் நிலுவையில் இருந்தன.

அரசு எடுத்த முக்கிய முடிவு

இந்த அரசாணையின் மூலம், சிறப்பு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையர் (Special Commissioner & Commissioner of Land Administration) அவர்களுக்கு, நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் உள்ள பிழைகளை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எந்த வகையான தவறுகளை திருத்தலாம்?

அரசாணையின் நோக்கத்தின்படி, கீழ்க்கண்ட நிர்வாகப் பிழைகள் பரிசீலிக்கப்படலாம்:

* பட்டாவில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள்.
* சர்வே எண் பிழைகள்.
* எல்லை விவரங்களில் உள்ள தவறுகள்.
* தவறான பெயர் பதிவு.
* நத்தம் நிலவரித்திட்ட அலுவலர்கள் வழங்கிய ஆணைகளில் ஏற்பட்ட நிர்வாகக் குறைகள்.
* ஆவணங்களில் உள்ள வெளிப்படையான பதிவுப் பிழைகள்.

அதிகாரம் யாருக்கு?

இந்த அரசாணையின் முக்கிய அம்சம்:

நில நிர்வாக ஆணையரே (Commissioner of Land Administration) இந்த வகை திருத்தங்களைச் செய்யும் அதிகாரம் பெற்றவர் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதனால் மாவட்ட அளவில் குழப்பம் குறைந்து, மாநில அளவில் ஒரே மாதிரியான நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

ஏன் இந்த அரசாணை முக்கியமானது?

நத்தம் பட்டா என்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வீட்டு உரிமையை நிரூபிக்கும் முக்கிய ஆவணம்.

ஒரு சிறிய நிர்வாகப் பிழை கூட:

* பட்டா மாற்றம்,
* விற்பனை,
* வாரிசு பதிவு,
* வங்கி கடன்,
* மின்சார இணைப்பு

போன்ற பல நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும்.

அதனால், தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்தை உயர்மட்ட அதிகாரியிடம் வழங்கியிருப்பது இந்த அரசாணையின் முக்கியத்துவமாகும்.

பொதுமக்களுக்கு கிடைக்கும் பயன்

இந்த அரசாணையால்:

* நத்தம் பட்டாவில் உள்ள பிழைகளைச் சரிசெய்ய தெளிவான நிர்வாக வழிமுறை கிடைத்துள்ளது.
* தேவையற்ற அலுவலக சுற்றுப்பயணங்கள் குறைகின்றன.
* மாவட்டங்களுக்கு இடையே மாறுபட்ட நடைமுறைகள் தவிர்க்கப்படுகின்றன.
* பட்டா பதிவுகளின் துல்லியம் மேம்படுகிறது.
* நில உரிமை தொடர்பான எதிர்கால பிரச்சினைகள் குறைகின்றன.

முக்கிய அம்சங்கள் (Quick Highlights)

* ✅ G.O.(Ms.) No.396 – 18.09.2003.
* ✅ நத்தம் நிலவரித்திட்டம் தொடர்பான முக்கிய அரசாணை.
* ✅ நத்தம் பட்டாக்களில் ஏற்பட்ட நிர்வாகப் பிழைகளை திருத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
* ✅ நில நிர்வாக ஆணையருக்கு (Commissioner of Land Administration) அதிகாரம் வழங்கப்பட்டது.
* ✅ மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை உருவாக்கப்பட்டது.
* ✅ பொதுமக்களின் பட்டா உரிமையை பாதுகாக்கும் முக்கிய நிர்வாகச் சீர்திருத்தம்.

முடிவுரை

G.O.(Ms.) No.396, Revenue Department, dated 18.09.2003 என்பது நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாக்களில் ஏற்பட்ட நிர்வாகப் பிழைகளைச் சரிசெய்வதற்கான அதிகாரத்தை நில நிர்வாக ஆணையருக்கு வழங்கிய முக்கிய அரசாணையாகும். இதன் மூலம், நத்தம் பட்டா தொடர்பான தவறுகள் ஒரே மாதிரியான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இது நத்தம் நில உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய நிர்வாக நடவடிக்கையாகும்.

🚨 "அரசு மனை", "நத்தம் புறம்போக்கு" என்று இருந்தாலும் பட்டாதாரர் பெயர் இருந்தால், Tamil Nilam பதிவில் அது "ரயத்துவாரி மனை...
08/07/2026

🚨 "அரசு மனை", "நத்தம் புறம்போக்கு" என்று இருந்தாலும் பட்டாதாரர் பெயர் இருந்தால், Tamil Nilam பதிவில் அது "ரயத்துவாரி மனை (Ryotwari Manai)" என வகைப்படுத்தப்படும்!

📜 தமிழக அரசின் முக்கிய அரசாணை

G.O.(Ms) No.221
📅 தேதி: 04.05.2023
🏛️ துறை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை – சர்வே மற்றும் செட்டில்மென்ட் பிரிவு

இந்த அரசாணையின் முக்கிய நோக்கம், மாநிலம் முழுவதும் (சென்னை தவிர) நத்தம் நில வகைப்பாடுகளை ஒரே மாதிரியாக்கி, Tamil Nilam கணினி பதிவுகளில் ஏற்படும் குழப்பத்தை நீக்குவதாகும்.

✅ பட்டாதாரர் பெயர் உள்ள கீழ்க்கண்ட வகைப்பாடுகள் Tamil Nilam-இல் "Ryotwari Manai" ஆக பதிவேற்றப்படும்:
• நத்தம் மனை
• நத்தம் புறம்போக்கு
• நத்தம் சொந்தம்
• நத்தம் பிரைவேட்
• அரசு மனை / சர்க்கார் மனை
• நத்தம் பட்டா வழங்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள்

❌ மாற்றப்படாதவை:
• சாலை
• தெரு
• கோயில்
• பள்ளி
• மயானம்
• பூங்கா
• தேசிய / மாநில நெடுஞ்சாலைகள்
• பிற பொது பயன்பாட்டு அரசு புறம்போக்கு நிலங்கள்

⚖️ முக்கிய சட்ட விளக்கம்:

இந்த அரசாணை புதிய உரிமையை (Title) வழங்குவதற்கானது அல்ல. ஏற்கனவே பட்டாதாரர் பெயருடன் உள்ள நத்தம் நிலப் பதிவுகளை ஒரே மாதிரியான "Ryotwari Manai" வகைப்பாட்டில் கணினி பதிவேற்றம் செய்வதற்கான நிர்வாக உத்தரவு ஆகும்.

📌 இதனால் கிடைக்கும் பயன்கள்:
✔️ நில வகைப்பாட்டில் தெளிவு
✔️ பட்டா மற்றும் பதிவில் குழப்பம் குறைவு
✔️ வங்கி கடன், கட்டிட அனுமதி போன்ற நடைமுறைகள் எளிது
✔️ தனியார் உரிமை நிலங்கள் அரசு நிலங்களாக தவறாக காட்டப்படுவதைத் தடுக்கும்

📖 அரசாணை: G.O.(Ms) No.221, Revenue & Disaster Management Department, 04.05.2023.









#சட்டம்

🚨 நீர்நிலை புறம்போக்கில் இருந்த எம்.எல்.ஏ அலுவலகம் இடித்து அகற்றம்..!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், சுமார் ...
08/07/2026

🚨 நீர்நிலை புறம்போக்கில் இருந்த எம்.எல்.ஏ அலுவலகம் இடித்து அகற்றம்..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த எம்.எல்.ஏ அலுவலக கட்டிடம், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று அரசு அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருங்குளம் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அமைந்திருந்த இந்த அலுவலகம் சட்டவிரோத ஆக்கிரமிப்பாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வந்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றினர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது வீடுகளுக்கும் ஏற்கனவே ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக குடியிருப்புகளும் அகற்றப்படுமோ என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

பின்னர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

✅ அறந்தாங்கியில் நீர்நிலை புறம்போக்கில் இருந்த எம்.எல்.ஏ அலுவலகம் இடித்து அகற்றம்.

✅ நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை.

✅ பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டிடம் முழுமையாக அகற்றப்பட்டது.

✅ எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

✅ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Address

36/18, Meenambal Nagar, , 5th Street, , Korukkupet, , Chennai –
Chennai
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share