தமிழ் இளைஞர்கள் படிப்பகம்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ் இளைஞர்கள் படிப்பகம்

தமிழ் இளைஞர்கள் படிப்பகம் கற்பி-ஒன்றுசேர்-போராடு.

தமிழ் இளைஞர்கள் படிப்பகம்:-
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் படிப்பகம் ஒன்று உருவாக்கி வருகிறோம்.
ஜனவரி 25, 2015 முதல் செயல்பட்டு வரும் இந்த படிப்பகத்தின் மூலம் போராட்டக் களத்தில் நிற்கும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு போராட்டத்தினை பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், தமிழினம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் குறித்து நாங்கள் (இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்) தெளிவுபெறவும், தம

ிழின மேம்பாட்டிற்கு அறிவுத்தளத்தில் செயல்பட இளைஞர்களை தயார் படுத்தவும் இப்படிபகம் உதவும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் இளைஞர்கள் படிப்பகத்தை துவங்குகிறோம்.
இனி தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டங்களும், வாரம் ஒரு முறை அரசியல் வகுப்பும் இப் படிப்பகத்தில் நடைபெறும்.
இது வரை அமைப்பில் உள்ள நண்பர்களின் உதவியுடன் சுமார் 600க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்திருக்கிறோம்.
திராவிடர் விடுதலை கழகம் சார்பில் குடியரசின் 21 தொகுப்புகளையும். பூவுலகின் நண்பர்கள் சார்பில் இயற்க்கை,நம்மாழ்வார், கூடங்குளம் மற்றும் மீதேன் குறித்து அவர்கள் வெளியிட்ட 40 புத்தகங்களையும்,
அய்யா.ஆனைமுத்து அவர்களின் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி சார்பில் சிந்தனையாளன் இதழ்களையும். தோழமை பதிப்பகம் அவர்கள் வெளியிட்டுள்ள 70புத்தகங்களின் ஒவ்வொரு பிரதியையும் கொடுக்க முன்வந்திருப்பது எங்கள் படிப்பகம் துவங்கும் முயற்சியினை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது.
தங்களிடம் உள்ள புத்தகங்களை தமிழ் இளைஞர்கள் படிப்பகதிற்கு அன்பளிப்பாக கொடுக்க விரும்பும் தோழர்கள்: 9600031771,9962289033 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.
#கற்பி_ஒன்றுசேர்_போராடு.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் இளைஞர்கள் படிப்பகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ் இளைஞர்கள் படிப்பகம்:

Share