08/08/2026
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் 🤝🛺
தென் சென்னை ஆட்டோ பிரிவு
** ஆகஸ்ட் மாதக் கலந்தாய்வு கூட்டம்**
08-08-2026 (சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில், வடுகப்பட்டு மெயின் ரோட்டில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவிலில் தென் சென்னை ஆட்டோ பிரிவின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சு. குணசேகரன் அவர்கள் தெளிவான விளக்கங்களையும் பதில்களையும் வழங்கினார்.
மேலும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டு, கலந்தாய்வு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தென் சென்னை ஆட்டோ பிரிவு சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றுபடுவோம் 🤝 வென்றெடுப்போம் 💪