சஹஜ யோகா தியானம்

சஹஜ யோகா தியானம் உடலிலும் மனதிலும் உணர்விலும் ஆன்மீக?

சஹஜ யோகம் 1970இல், அன்னை ஸ்ரீமாதாஜி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்களால் தரப்பட்ட ஒரு எளிமையான தியான முறை ஆகும். இதனால் அனைத்து மனிதர்களிடமும் இருக்கின்ற தெய்வீக சக்தியான குண்டலினியை எழுப்பி விழிப்புநிலை பெறச்செய்து அதன் மூலம், நம்மையும் இவ்வுலகையும் படைத்துக் காக்கின்ற பரமசக்தியுடன் இணைய வழி செய்கிறது. இந்த பழமையான யோக முறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை உள்ளதால், தினசரி இதைப் பயில்வது நமது அன்றாட வாழ்வில

் முழுமையான சமநிலையை ஏற்படுத்தித் தருகிறது.

நமக்குள் இருக்கும் இறைசக்தி மேலே எழும்பும் போது, நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனப்படும் சக்திமையங்களுக்கு ஊட்டமளித்து பராமரிக்கின்றது. சஹஜ யோக தியானத்தின் வாயிலாக இந்த சக்தி விழிப்பு நிலை அடையும் போது, நமக்கு உடலிலும், மனதிலும் உணர்விலும், ஆன்மீகத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதால், நல்ல ஆரோக்கியமான பலன்களைத் தருகின்றது. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிய எளிமையான வழிகளில் சஹஜயோகா தியான பயிற்சி அளிக்க படுகிறது. தொடர்ந்து காலையிலும் மாலையிலும் செய்து வரும் போது ஆரோக்கியமான வாழ்க்கையையும் மனஅழுத்தம் அற்ற நிலைமையையும் நமக்கு தந்து உதவுகிறது. உலகின் 140 நாடுகளிலும் அனைத்து இன மக்களும் இதனை பயற்சி செய்து வருகின்றனர்.

01/02/2026

சஹஜ யோகா பொது நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் - அம்பத்தூர்
அனைவரும் வருக !
இடம்: ஆன்மீக சமாஜம் சத்சங்கம் டிரஸ்ட், 50 பி, சத்சங்கம் தெரு, வெங்கடாபுரம், அம்பத்தூர்
தேதி: ஞாயிற்றுக்கிழமை 8 பெப்ரவரி 2026
நேரம்: காலை 10:30 முதல் மதியம் 12:00 வரை
9176726242

14/12/2024

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் (13 டிசம்பர் 2024) அன்று சகஜ யோகா மூலமாக ஆத்ம விழிப்புணர்வு பெற்ற பிறகு அனுபவத்தை பகிர்ந்த பக்தர்

பொது நிகழ்ச்சி: ஜூன் 16, 2024, ஞாயிறு நேரம்: மாலை  5:00 - 6:30 வரை இடம்: சுந்தரவிநாயகர் கோயில் மண்டபம், விஷணுநகர், புதிய...
15/06/2024

பொது நிகழ்ச்சி: ஜூன் 16, 2024, ஞாயிறு நேரம்: மாலை 5:00 - 6:30 வரை
இடம்: சுந்தரவிநாயகர் கோயில் மண்டபம், விஷணுநகர், புதிய பெருங்களத்தூர்

27/01/2024

Address

Chennai
600042

Alerts

Be the first to know and let us send you an email when சஹஜ யோகா தியானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சஹஜ யோகா தியானம்:

Share