BHEL/BAP ஊழியர்கள் சமுக சேவை அறக்கட்டளை

  • Home
  • India
  • Bhel
  • BHEL/BAP ஊழியர்கள் சமுக சேவை அறக்கட்டளை

BHEL/BAP ஊழியர்கள் சமுக சேவை அறக்கட்டளை இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீடடி உதவி செய் இறைவன் உன்னிடம் இறங்குவான்

அனைவருக்கும் வணக்கம்      இன்று (13.05.2026 )  வாலாஜா அனந்தலை ஊராட்சியில் இயங்கி வரும் துளிர்கள் மனநலம் குன்றிய உண்டு உற...
13/05/2026

அனைவருக்கும் வணக்கம்
இன்று (13.05.2026 ) வாலாஜா அனந்தலை ஊராட்சியில் இயங்கி வரும் துளிர்கள் மனநலம் குன்றிய உண்டு உறைவிடப் பள்ளிக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 10000 மதிப்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அதன் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், தொடர்ந்து ஆதரவளிப்போம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தோம்.
மேலும் அதன் நிர்வாகிகள் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கி வரும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை இராணிப்பேட்டை

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.         இன்று (27.02-2026)பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம்...
27/02/2026

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று (27.02-2026)
பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 222 மாணவர்களுக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக பொதுத்தேர்வு எழுவதற்கு தேவையான சுமார் ரூ.28000 மதிப்புள்ள எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பான நிகழ்வில் நமது அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் குறித்தும் பொதுத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு உரையாற்றினார்கள்.
மேலும் பள்ளியில் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பெருமகிழ்வுடன் பங்கேற்றனர்.
இறுதியாக ஆசிரியர்களும் குறிப்பாக மாணவ மாணவிகளும் நமக்கு நன்றி தெரிவித்ததோடு நமது நிறுவனம் மேன்மேலும் வளரவும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் நாங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.
நமது BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளையின் இது போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து நிதியுதவியும் ஆதரவும் அளித்து சேவையாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நமது நிறுவன ஊழியர்கள் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து பணியாற்றிட அன்போடு அழைக்கிறோம்.. 🙏🙏🙏
இவண்..
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை,
இராணி பேட்டை.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.         இன்று (26.02-2026)ரெண்டாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆ...
26/02/2026

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று (26.02-2026)
ரெண்டாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 250 மாணவர்களுக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக பொதுத்தேர்வு எழுவதற்கு தேவையான சுமார் ரூ.30000 மதிப்புள்ள எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பான நிகழ்வில் நமது அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் குறித்தும் பொதுத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு உரையாற்றினார்கள்.
மேலும் பள்ளியில் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பெருமகிழ்வுடன் பங்கேற்றனர்.
இறுதியாக ஆசிரியர்களும் குறிப்பாக மாணவ மாணவிகளும் நமக்கு நன்றி தெரிவித்ததோடு நமது நிறுவனம் மேன்மேலும் வளரவும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் நாங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதியுடன் தெரிவித்தனர்.
நமது BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளையின் இது போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து நிதியுதவியும் ஆதரவும் அளித்து சேவையாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நமது நிறுவன ஊழியர்கள் அனைவரும் நமது அறக்கட்டளையில் இணைந்து பணியாற்றிட அன்போடு அழைக்கிறோம்.. 🙏🙏🙏
இவண்..
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை,
இராணி பேட்டை.

அனைவருக்கும் வணக்கம்        திருவண்ணாமலை சகாய நகரில் வசிக்கும் திருமதி காளிஷ்வரி அவர்கள் கணவரை இழந்து இரு மகன்களுடன் வசி...
16/01/2026

அனைவருக்கும் வணக்கம்
திருவண்ணாமலை சகாய நகரில் வசிக்கும் திருமதி காளிஷ்வரி அவர்கள் கணவரை இழந்து இரு மகன்களுடன் வசித்து வருகிறார் இவர் சென்னை அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது CMC மருத்துவ மனையில் பரிசோதனை செய்து அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் பெற்று வருகிறார். அவர் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என்பதாலும் குடும்ப சூழ்நிலையை கருதியும் நமது அறக்கட்டளை பற்றி தெரிந்து நம்மிடம் உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
அதனடிப்படையில் அவரது குடும்ப சூழ்நிலைகளை பற்றி விசாரித்து அவர்களுக்கு நமது அறக்கட்டளையின் சார்பாக ரூ 10000 மருத்துவ உதவி வழங்குவது என‌ முடிவு செய்யப்பட்டு இன்று (16.01.2026) CMC மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவர்களிடம் ரூ 10000 வழங்கப்பட்டது.
நமது உதவியை ஏற்றுக் கொண்டு நமது நிறுவனத்திற்கும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை
இராணிப்பேட்டை.

அனைவருக்கும் வணக்கம்      இன்று (09.01.2026 ) வேலூர் சேவூர்  பகுதியில் இயங்கி வரும் நவஜீவன் மாணவர்கள் விடுதியில் தங்கி ப...
09/01/2026

அனைவருக்கும் வணக்கம்
இன்று (09.01.2026 ) வேலூர் சேவூர் பகுதியில் இயங்கி வரும் நவஜீவன் மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வரும் 56 மாணவர்களுக்கு அதன் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று ரூ 25000 மதிப்பில் 56 செட் பாய் தலையணை மற்றும் போர்வை நமது அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.
மேலும் அந்த மாணவர்களிடையே கல்வியின் அவசியம் குறித்து விளக்கினோம் படிப்பிற்கான உதவிகள் எப்போதும் தேவைப்பட்டாலும் செய்வோம் என்றும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறக்கட்டளை சார்பாக தெரிவித்தோம்
மேலும் அதன் நிர்வாகிகள் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கி வரும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை இராணிப்பேட்டை

அனைவருக்கும் வணக்கம்      இன்று (02.12.2025 )  நரசிங்கபுரம் பகுதியில் குமாரி என்பவர் தனது கணவரை ( இவர் BHEL ல் காண்ட்ராக...
02/12/2025

அனைவருக்கும் வணக்கம்
இன்று (02.12.2025 ) நரசிங்கபுரம் பகுதியில் குமாரி என்பவர் தனது கணவரை ( இவர் BHEL ல் காண்ட்ராக்ட்டில் வேலை செய்தவர்) இழந்து தனது இரு மகன்களுடன் வறுமையில் வாழ்ந்து வருவதாகவும் அவருக்கு ஏதேனும் உதவியும், வீட்டு வேலை எதாவது இருந்தால் வாங்கி தருமாறும் நமது அறக்கட்டளைக்கு கோரிக்கை வந்தது. இதனையடுத்து நேரடியாக சென்று அவர்களின் குடும்ப சூழ்நிலையை அறிந்து அவர்களின் குடும்பத்திற்கு ரூ 10000 மதிப்பிலான மளிகை பொருட்கள் நமது அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு வீட்டு வேலைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது
மேலும் அந்த சிறுவர்களுக்கு படிப்பிற்கான உதவி எப்போதும் தேவைப்பட்டாலும் செய்வோம் என்றும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறக்கட்டளை சார்பாக தெரிவித்தோம்
மேலும் அவர்கள் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கி வரும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை இராணிப்பேட்டை

அனைவருக்கும் வணக்கம்   வேலூர், ராணிப்பேட்டையில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இன்று (28.11.25) நமது அறக்கட்டளையின் ச...
29/11/2025

அனைவருக்கும் வணக்கம்
வேலூர், ராணிப்பேட்டையில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இன்று (28.11.25) நமது அறக்கட்டளையின் சார்பில் பூட்டுதாக்கு. இரத்தினகிரி, சத்துவாச்சாரி, வேலூர் பழைய. புதிய பேருந்து நிலையம் வேலூர் கோட்டை பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள் 100 பேருக்கு போர்வை வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைத்து BAP ஊழியர்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்...
நன்றி
*BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை*
இராணிப்பேட்டை

அனைவருக்கும் வணக்கம்   இன்று (24.11.25) நமது அறக்கட்டளையின் சார்பில் சிப்காட், திருவலம், முத்துக்கடை, வாலாஜா, ராணிப்பேட்...
24/11/2025

அனைவருக்கும் வணக்கம்
இன்று (24.11.25) நமது அறக்கட்டளையின் சார்பில் சிப்காட், திருவலம், முத்துக்கடை, வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள் 100 பேருக்கு போர்வை வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைத்து BAP ஊழியர்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்...
நன்றி
*BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை*
இராணிப்பேட்டை

அனைவருக்கும் வணக்கம்      இன்று (23.11.2025 )   ஆற்காடு சாத்தூர் கிராமத்தில் தாயை இழந்து பாட்டியுடன் வாழ்ந்து வரும் 5 ஆம...
23/11/2025

அனைவருக்கும் வணக்கம்
இன்று (23.11.2025 ) ஆற்காடு சாத்தூர் கிராமத்தில் தாயை இழந்து பாட்டியுடன் வாழ்ந்து வரும் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கயல்விழியின் குடும்ப சூழ்நிலையை அறிந்து அவர்களின் குடும்பத்திற்கு ரூ 10000 மதிப்பில் மளிகை பொருட்கள் மற்றும் துணிகள், பள்ளி செல்ல புத்தகப்பை, டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட சாப்பாட்டு பை போன்றவை நமது அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.
மேலும் அந்த சிறுமியின் படிப்பிற்கான உதவி எப்போதும் தேவைப்பட்டாலும் செய்வோம் என்றும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறக்கட்டளை சார்பாக தெரிவித்தோம்
மேலும் அந்த சிறுமியும் அவரது பாட்டியும் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கி வரும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை இராணிப்பேட்டை

அனைவருக்கும் வணக்கம்      இன்று (15.11.2025 )  சத்துவாச்சாரி வேலூரில் சுமார் 40 குழந்தைகளுடன் செயல்பட்டு  வரும்  நம்பிக்...
15/11/2025

அனைவருக்கும் வணக்கம்
இன்று (15.11.2025 ) சத்துவாச்சாரி வேலூரில் சுமார் 40 குழந்தைகளுடன் செயல்பட்டு வரும் நம்பிக்கை இல்லத்திற்கு நமது அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 10000 மதிப்பில் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் Induction stove வழங்கப்பட்டது. அதன் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், சிறுவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற அறிவுரையும், தொடர்ந்து ஆதரவளிப்போம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தோம்.
மேலும் அதன் நிர்வாகிகளும், சிறுவர்களும் நமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியையும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கி வரும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.
BHEL/BAP ஊழியர்கள் சமூக சேவை அறக்கட்டளை இராணிப்பேட்டை

Address

B 138, BHEL TOWNSHIP
Bhel
632406

Telephone

+919940206012

Website

Alerts

Be the first to know and let us send you an email when BHEL/BAP ஊழியர்கள் சமுக சேவை அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share