SKY TRUST UK

SKY TRUST UK SKY Trust UK is a branch of World Community Service Centre, India, which follows the principles and philosophies of Yogiraj Vethathiri Maharishi.

SKY Stands for Simplified Kundalini Yoga which is been perceived and expereinced by Vethathiri Maharshi. Simplified Kundalini Yoga or SKY is a physical, mental and spiritual discipline packaged by Yogiraj Vethathiri Maharishi for developing strength, awareness, character, and consciousness. The practice of Pranayamam , Acupressure, Asanas and Thavam in Simplified Kundalini Yoga raises the body awa

reness to prepare the body, nervous system, and mind to handle the Life energy better. Thavam practice is initiated by senior SKY mentors or practitioners.

13/01/2026
13/01/2026

Happy Pongal Day 2026

https://youtu.be/De9K6ZLX524?si=zE84y_IG3RcYfCgE
28/06/2025

https://youtu.be/De9K6ZLX524?si=zE84y_IG3RcYfCgE

மன அமைதி, உடல் ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை குண....

14/04/2025

*🙏💐❤️🪔🔥இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎊🎉சித்திரையைச் சீராக்கி*🎉🎊

*🎉வைகாசியை வசந்தமாக்கி*

*🎉ஆனியை ஆனந்தமாக்கி*

*🎉ஆடியை ஆரோக்கியமாக்கி*

*🎉ஆவணியை ஆசீர்வாதமாக்கி*

*🎉புரட்டாசியைப் புனிதமாக்கி*

*🎉ஐப்பசியை(அய்ப்பசி) அற்புதமாக்கி*

*🎉கார்த்திகையைக் காருண்யமாக்கி*

*🎉மார்கழியை மாண்பாக்கி*

*🎉தையைத் தைரியமாக்கி*

*🥭மாசியை மாணிக்கமாக்கி*

*🎉பங்குனியைப் பக்குவமாக்கி*

*🎉பல வள(ர)ங்கள் தந்திட*

*🎉விசுவாவசு வருகிறாள்*
*🙏 🙏🙏 🎉வாழ்த்தி வரவேற்போம் 🎉🎊🙏🙏*

*வாழ்க* *வையகம்* 🙏
*வாழ்க* *வளமுடன்* 🙏
*வாழ்க* *வளமுடன்* 🙏
*வாழ்க* *வளமுடன்* 🙏

30/07/2024

#தீட்டு_என்றால்_என்ன...?

🌻 "தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.

🌻 இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை.

🌻 இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

🌻 தீட்டு என்பது என்ன?

🌻 இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

🌻 தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.

🌻 தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.

🌻 தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

🔻ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, 🔻குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
🔻பெண்கள் மாதவிடாயும் தீட்டு,
🔻இறந்தாலும் தீட்டு!
இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

🔘 தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்?
🔻சிந்தித்துப் பாருங்கள்.
🔻இதுவல்ல உண்மையான தீட்டு.

🔻இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

🤗 தீட்டு என்பது வேறு அவை...,

✴காமம்,
✴குரோதம்,
✴லோபம்,
✴மதம்,
✴மாற்சரியம்
என்னும் பஞ்சமா பாதங்கள்!

#காமத்_தீட்டு:

🔺காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.
🔺நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம்.
🔺அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.
🔺அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும்.
🔺இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும்.
🔺இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
🔺இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

#குரோதத்_தீட்டு:

🔺குரோதம் என்பது கோபம்.
🔺யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.
🔺சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள்.
🔺சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
🔺கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன.
🔺ஆயுளும் குறைந்து விடுகிறது.
🔺கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
🔺இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.
🔺குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

#லோபத்_தீட்டு:

🔺லோபம் என்பது சுயநலம்.
🔺பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும்,
🔺இரக்கம் என்பதே இல்லாமலும், 🔺சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும்,
🔺கஞ்சத்தனமும்,
🔺எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும்,
🔺தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும்,
🔺வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும்,
🔺எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே.
🔺இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
🔺அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.
🔺இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

#மதத்_தீட்டு:

🔺மதம் என்பது கர்வம் (ஆணவம்). 🔺ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது.
🔺எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது.
🔺தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது.
🔺ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. 🔺இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?
🔺இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர்.
🔺கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

#மாற்சரியத்_தீட்டு:

🔺மாற்சரியம் என்பது பொறாமை.
🔺பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது.
🔺எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.
🔺எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.
🔺தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம்.
🔺பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். 🔺தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.
🔺இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?
🔺இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். 🔺இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள்... இறைவனை வழிபட முடியாது.
🤗இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

Worth listening
08/07/2024

Worth listening

, ிவவாக்கியர் பாடல்களில் காணப்படும் தத்துவங்கள் பற்றிய விளக்கம்

05/05/2024

கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது…

ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள்.
முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது....

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_
முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

_*கணியன் பூங்குன்றனார்*_

இதன் பொருள் ….
_*"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."*_
*எல்லா ஊரும் எனது ஊரே....எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று எண்ணுக

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."*_
உனக்கு வரும் தீமையானாலும் நன்மையானாலும், அது அடுத்தவரால் வருவதில்லை.
அவற்றின் அடிப்படை காரணம் நீதான் என்பதை உணர்க ..

*"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன...."*_
*மனக் கவலையும் ஆறுதலும்கூட மற்றவரால் கிடைப்பது இல்லை, மனம் பக்குவப்பட்டால், கவலைகள் உன்னை அண்டாது என்க ..

_*"சாதலும் புதுவது அன்றே.."*_
இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....

_*"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே."*_
வாழ்க்கையில் ஏற்படும் இனிய நிகழ்வுகளைக் குறித்து பெருமகிழ்ச்சி கொள்ளவும் வேண்டாம் ..
அதுபோலவே, துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.
இன்பமும் துன்பமும் இணைந்தே வாழ்க்கை என்பதை உணர்க…

*"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."*

*இந்த வானம் வெப்பமான மின்னலையும் தருகிறது குளிர்ந்த மழையையும் தருகிறது.
கற்களைப் புறட்டிச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தில், முட்டிமோதிச் செல்லும் படகு போல, , துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஊடே வாழ்க்கையும் போய்கொண்டே இருக்கும்.
இதுவே இயல்பு என மனத்தெளிவு கொள்க....*_

*"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."*_
*இந்த தெளிவு வரப் பெற்றால், உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து வியந்து நிற்கவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ளவர்களைப் பார்த்து இகழ்வதும் வேண்டாம்.
அவரவர் வாழ்வில் அவரவர் பெரியவர் என்பது அடிப்படை .. A great creation by Kanniyan Poongundranar.
Must be preserved as a Thamil masterpiece

கன்னியன் பூங்குன்றனாரின் மாபெரும் படைப்பு.
தமிழ் மொழியில் தலைசிறந்த படைப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
புவனா மற்றும் சாந்தி
🙏🏻🙏🏻🙏🏻

https://youtu.be/U7S_SeCSmZw?si=VsIq7w1qLenXk1KS
15/04/2024

https://youtu.be/U7S_SeCSmZw?si=VsIq7w1qLenXk1KS

ஜெர்மனியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில், தமிழெக்ஸ் என்னும் தமிழ் மொழிக்கான டிஜிட்டல் பேரகராதியை உருவாக்கும் ....

Address


Alerts

Be the first to know and let us send you an email when SKY TRUST UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SKY TRUST UK:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share