Kaluwanchikudy Welfare Association - UK

Directions Website

Kaluwanchikudy Welfare Association - UK KWA is a non-profit Charity organisation, Our mission is to empower education and change lives.

மனிதநேயப் பணி – வெற்றிகரமாக நிறைவு! 🤝களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் UK இன் கிளைச்சங்க உறுப்பினர்களின் உடனடி ஒத்துழைப்பி...
04/07/2026

மனிதநேயப் பணி – வெற்றிகரமாக நிறைவு! 🤝

களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் UK இன் கிளைச்சங்க உறுப்பினர்களின் உடனடி ஒத்துழைப்பினாலும் அர்ப்பணிப்பான பங்களிப்பினாலும், பயனாளி ஒருவரின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு நல்ல சுகாதார கழிப்பறை அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு நேரம், உழைப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கிய எமது கிளைச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் UK சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“ஒன்றிணைந்த சேவை… உயர்ந்த மனிதநேயம்…!” ❤️🙏

🏆 இன்னும் ஒரு வாரம் மட்டுமே! ⏳அன்பார்ந்த நண்பர்களே,Kaluwanchikudy Welfare Association UK (KWA-UK) பெருமையுடன் நடத்தும் 2...
03/07/2026

🏆 இன்னும் ஒரு வாரம் மட்டுமே! ⏳

அன்பார்ந்த நண்பர்களே,

Kaluwanchikudy Welfare Association UK (KWA-UK) பெருமையுடன் நடத்தும் 28வது ஆண்டு KWA Sports Fest 2026 இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது!

பிரித்தானியாவில் தமிழ் சமூகத்தினரிடையே நம்பிக்கையுடனும் மதிப்புடனும் விளங்கும் தொண்டு நிறுவனமான KWA-UK, கடந்த 28 ஆண்டுகளாக சமூக ஒற்றுமையையும் குடும்ப உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விளையாட்டுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் அனைவரின் ஆதரவுடன் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில்,

🏃‍♂️ அனைத்து வயதினருக்கும் விளையாட்டுப் போட்டிகள்
🥇 வெற்றியாளர்களுக்கு தரமான கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள்

🍔 சுவையான உணவு மற்றும் பானக் கடைகள்

🎵 இனிய இசை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப மகிழ்வூட்டும் அம்சங்கள்

உங்கள் வருகையும் ஆதரவும் இந்த விழாவின் மிகப்பெரிய பலம்.

எனவே, உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து வந்து, இந்த மாபெரும் சமூக விளையாட்டுத் திருவிழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

📅 11 ஜூலை 2026 (சனிக்கிழமை)
🕘 காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
📍 The Rugby Football Club, Webb Ellis Road, Rugby, CV22 7AU

ஒன்றிணைவோம்… விளையாடுவோம்… கொண்டாடுவோம்…!
KWA-UK Sports Fest 2026-ல் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! 💙💚🏆

📚 நினைவுப் பதிவு – கல்விக்காக வழங்கிய Smart Board இன்று பயனளிக்கிறது 📚கடந்த பிப்ரவரி 2026 மாதம், களுவாஞ்சிகுடி நலன்புரிச...
22/06/2026

📚 நினைவுப் பதிவு – கல்விக்காக வழங்கிய Smart Board இன்று பயனளிக்கிறது 📚

கடந்த பிப்ரவரி 2026 மாதம், களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) சார்பில் மட்/பட்/விநாயகர் வித்தியாலயம், களுவாஞ்சிகுடி பாடசாலைக்கு 65” Smart Board ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அந்த நிகழ்வின் சில நினைவுப் புகைப்படங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று அந்த Smart Board மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பயனுள்ளதாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுவதாகவும் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எமது சங்க உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரு உதவி வழங்கப்பட்டு முடிவடைவது மட்டுமல்லாமல், அது தொடர்ச்சியாக சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் பயனளிப்பதே எமது பணியின் உண்மையான வெற்றியாகும்.

இத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய தாய் சங்கம், கிளைச் சங்கம் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

“கல்விக்காக விதைக்கப்பட்ட ஒவ்வொரு விதையும், நாளைய தலைமுறையின் வெற்றியாக மலர்கிறது.” 🌱📚

களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம்
(பிரித்தானியா)KWA-UK

#களுவாஞ்சிகுடிநலன்புரிசங்கம் #கல்விஉதவி #நினைவுப்பதிவு 📸✨

🎶 அறநெறிப் பாடசாலைக்கு இசைக்கருவிகள் வழங்கல் 🎶களுவாஞ்சிகுடி சைவ மகா சபையின் கீழ் இயங்கி வரும் அறநெறிப் பாடசாலை, கடந்த 65...
21/06/2026

🎶 அறநெறிப் பாடசாலைக்கு இசைக்கருவிகள் வழங்கல் 🎶

களுவாஞ்சிகுடி சைவ மகா சபையின் கீழ் இயங்கி வரும் அறநெறிப் பாடசாலை, கடந்த 65 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அறம், ஒழுக்கம், கலை, கலாசாரம் மற்றும் சமூக விழுமியங்களை போதித்து சிறந்த தலைமுறையை உருவாக்கி வருகின்ற ஒரு பாரம்பரியமிக்க கல்வி நிலையமாகும்.

கல்வி அமைச்சினால் நடத்தப்படும் பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக பங்கேற்று பல்வேறு சாதனைகளையும் சிறப்பான பெறுபேறுகளையும் பெற்று வருகின்றனர். கடந்த வருடமும் மாணவர்கள் பல போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தனர்.

இவ்வாண்டும் மாணவர்கள் இப்போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று வெற்றிகளைப் பெறுவதற்காக ஹார்மோனியம் (Harmonium) மற்றும் டோலாக் (Dholak) போன்ற இசைக்கருவிகள் தேவைப்படுவதாக பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனை கருத்தில் கொண்டு, களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் (UK) சார்பில் குறித்த இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டும் நடைபெறவுள்ள பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் (UK)
Kaluwanchikudy Welfare Association UK (KWA-UK) 🇬🇧🤝🇱🇰

🙏 “இன்றைய மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பதே நாளைய சமூகத்தின் வெற்றிக்கான முதலீடாகும்.” 🙏

#அறநெறிப்பாடசாலை

🎉🏆 KWA SPORTS FEST 2026 🏆🎉📢 அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம்!🇬🇧 களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் UK பெருமையுடன் நடத்தும் 28வ...
15/05/2026

🎉🏆 KWA SPORTS FEST 2026 🏆🎉

📢 அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம்!

🇬🇧 களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் UK பெருமையுடன் நடத்தும் 28வது வருடாந்த விளையாட்டு விழா – KWA SPORTS FEST 2026 நிகழ்விற்கு தங்களையும்,தங்கள் குடும்பத்தினரையும், மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! ❤️

📅 திகதி: 11 ஜூலை 2026
🕘 நேரம்: காலை 9.00 மணி – மாலை 7.00 மணி வரை
📍 இடம்: The Rugby Football Club, Webb Ellis Road, Rugby, CV22 7AU

✨ மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நிகழ்வுகள்:

⚽ அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள் போட்டிகள் & Games
🍔 சுவையான உணவு Drink Stalls
🎵 இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
👨‍👩‍👧‍👦 குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியான செயற்பாடுகள்
🏰 குழந்தைகளுக்கான Bouncy Castle
🎨 குழந்தைகளுக்கான Face Painting
🏆 போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள்
🔥 மாலை நேர Live Food Station

🎟️ TICKETS AVAILABLE AT THE GATE

இந்த மகிழ்ச்சியான சமூக ஒன்றுகூடலில் உங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்! 🙌❤️

உங்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்!

#குடும்ப_மகிழ்ச்சி_நாள் #விளையாட்டு_விழா #தமிழர்_சமூகம்

Coming Soon............Stay tuned; Follow us for further updates and announcements coming your way soon.
30/04/2026

Coming Soon............
Stay tuned; Follow us for further updates and announcements coming your way soon.

Address

28 Ennerdale Avenue
Stanmore
HA72LD

Alerts

Be the first to know and let us send you an email when Kaluwanchikudy Welfare Association - UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Sponsored

Share