NYSDA UK

NYSDA UK 💚 UK-based charity | Lifting as we climb 🌱 Supporting education and families in Sri Lanka
Registered Charity No. 1150310

எங்கள் கல்வி மேம்பாட்டு பெரும்பணியில் மாதாந்த உதவி பெறும் பட்டதாரி ஒருவரிடமிருந்து வந்த இதயம் கனிந்த நன்றிக் கடிதம் 💚இவர...
11/05/2026

எங்கள் கல்வி மேம்பாட்டு பெரும்பணியில் மாதாந்த உதவி பெறும்
பட்டதாரி ஒருவரிடமிருந்து வந்த இதயம் கனிந்த நன்றிக் கடிதம் 💚

இவர் தமிழில் எழுதிய நன்றிக்கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்க இணைப்பை.

தமிழ் புத்தாண்டு 💚சித்திரை திருநாளாக அறியப்படும் தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுக்கு புதிய தொடக்கங...
11/05/2026

தமிழ் புத்தாண்டு 💚

சித்திரை திருநாளாக அறியப்படும் தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுக்கு புதிய தொடக்கங்கள், நம்பிக்கை மற்றும் சிந்தனைக்கான காலமாகும். வழக்கமாக இது குடும்பத்துடன் நேரம் கழித்து, உணவை பகிர்ந்து கொண்டு, வரவிருக்கும் ஆண்டை நேர்மறையான எண்ணங்களுடன் வரவேற்கும் நேரமாகும்.
ஆனால் தாயகத்தை பொறுத்தவரையில் பலருக்கு நீண்டகால மோதல்களின் பின்னணியில் தொடரும் சவால்களால், கொண்டாட்டங்கள் என்பது கனவாகவே இருக்கின்றது.

இவ்வகையில் வழமைபோல் இந்த ஆண்டும் உங்கள் ஆதரவுடன் போரினால் பாதிக்கப்பட்டு வலிவிழந்த 12 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடிந்தது.

சிறிய செயல் என்றாலும் இந்த முக்கியமான காலத்தில் இது அவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

நாங்கள் செயல்படும் இடங்கள் 💚பல ஆண்டுகளாக தாயகத்தின் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் உள்ள சமூகங்களுடன் நெருக்கமாக...
11/05/2026

நாங்கள் செயல்படும் இடங்கள் 💚

பல ஆண்டுகளாக தாயகத்தின் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் உள்ள சமூகங்களுடன் நெருக்கமாக இணைந்து, மிகவும் தேவையான இடங்களில் ஆதரவு வழங்கி வருகிறோம்.

ஒவ்வொரு குறிப்பிடப்பட்ட பகுதிகளும், உங்கள் தாராள மனப்பான்மை மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புகளின் மூலம் நாங்கள் ஆதரித்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எதிர்காலத்தில் மேலும் பல சமூகங்களை ஆதரிக்க எங்கள் செயல்பாட்டு வலயத்தை விரிவுபடுத்தத் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

எங்கள் இலக்கு  💚கடந்த சில ஆண்டுகளாக தாயகத்திலுள்ள எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிற...
11/05/2026

எங்கள் இலக்கு 💚

கடந்த சில ஆண்டுகளாக தாயகத்திலுள்ள எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

கல்வியை ஆதரிக்கும் வகையில் கல்வி மையங்களை நடத்த உதவி செய்வது, கல்விக் கட்டணங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் புத்தகங்கள் எழுதுபொருட்கள் போன்ற அத்தியாவசிய கல்வி வளங்களை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

போருக்குப் பிறகு, பல குடும்பங்கள் இன்னும் சவால்களை எதிர்கொண்டு அன்றாட அடிப்படை தேவைகளுக்காக போராடி வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி, அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையை குறைக்க உதவி செய்து வருகிறோம்.

போரின் தாக்கம் காரணமாக பலருக்கு பெருமளவான மருத்துவ தேவைகள் உருவாகியுள்ளன. மாற்றுத் திறனாளிகள் மற்றும் அங்கவீனத்துடன் வாழ்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உபகரணங்கள் மற்றும் தேவையான ஆதரவுகளுக்காக நிதி உதவி வழங்கி வருகிறோம்.

நீண்டகால மாற்றத்திற்கும் நாங்கள் உறுதியாக உள்ளோம். தனிநபர்கள் தன்னிறைவு அடைய நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்கி தேவையான கருவிகள் மற்றும் வளங்களை வழங்கி ஆதரித்து வருகிறோம்.

எங்களைப் பற்றி 💚தாயகத்தில் நடைபெற்ற போரின் தாக்கத்திற்கு பின்னர் அங்குள்ள எங்கள் உறவுகளை ஆதரிக்கும் நோக்கத்துடன், NYSDA ...
11/05/2026

எங்களைப் பற்றி 💚

தாயகத்தில் நடைபெற்ற போரின் தாக்கத்திற்கு பின்னர் அங்குள்ள எங்கள் உறவுகளை ஆதரிக்கும் நோக்கத்துடன், NYSDA UK 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

எங்கள் சமூக உறுப்பினர்களின் மாதாந்த பங்களிப்பு, நன்கொடை மற்றும் நிதிப்பேழைகள் மூலம் உதவி நிதி திரட்டிக் கொண்டு வருகிறோம்.

உதவிகள் சிறியதாக இருந்தாலும் ஒவ்வொரு பங்களிப்பும் நேரடியாக எம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஆதரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிறிய உதவியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சமூக நற்பணி அறக்கட்டளை அமைப்பாக இருக்கிறோம்.

நாம் ஒன்றானால் எம்மக்களின் வாழ்வியலை உயர்த்தி சீரான சமுதாயத்தை கட்டியெழுப்பலாம் என்பது உறுதி.

NYSDA UK- யின் புதிய தோற்றம் 💚எங்கள் புதிய அடையாளச் சின்னத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். ...
11/05/2026

NYSDA UK- யின் புதிய தோற்றம் 💚

எங்கள் புதிய அடையாளச் சின்னத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

எங்கள் தோற்றம் மாறியிருந்தாலும், எங்கள் நோக்கம் மாறவில்லை. எம் மக்களின் அடிப்படை தேவைகள், கல்வி, மருத்துவம் மற்றும் சுயதொழில் ஆகியவற்றின் மூலம் தாயக சமூகங்களை வலுப்படுத்துவதாகும்.

இப்பயணத்தில் எங்களுடன் நீங்கள் இணைந்திருப்பதற்கு நன்றி! அனைவரும் சேர்ந்து எம் உறவுகளை காப்போம் கை கொடுப்போம்.

வணக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 12 குடும்ப உறவுகளுக்கு சித்திரை வருட திருநாளில் வழங்கப்பட்ட...
13/04/2026

வணக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 12 குடும்ப உறவுகளுக்கு சித்திரை வருட திருநாளில் வழங்கப்பட்ட உதவிகள்.

Address

Morden

Website

Alerts

Be the first to know and let us send you an email when NYSDA UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to NYSDA UK:

Share